சிங் இஸ் கிங்!



வீரம், தீரம் காட்டுவதாகட்டும்; மதத்தை நேசிப்பதாகட்டும்... சீக்கியர்களுக்கு நிகர் சீக்கியர்கள்தான். அதற்கு உதாரணம்தான் இந்தப் புகைப்படம்.

அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் குற்றங்களுக்கு எதிரானது சீக்கிய மதம் என்பதை உலகுக்கு உணர்த்த ஆண்டுதோறும் டர்பன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்பதாயிரம் சீக்கியர்கள் டர்பன் அணிந்து உலக சாதனை செய்துள்ளனர். நியூயார்க்கைச் சேர்ந்த சீக்கிய அமைப்பினால் நடத்தப்படும் வைசாகி கொண்டாட்டத்தில் டர்பன்கள் அணிந்தது கின்னஸ் சாதனையாக பதிவாகியுள்ளது.  

ரோனி