கருப்பு தாஜ்மஹால்!



உலகளவில் புகழ்பெற்ற பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாஜ்மஹால், பலருக்கும் ஷாக் தரும் விதமாக மெல்ல கருப்பு நிறமாக மாறிவருகிறது.

2015ம் ஆண்டிலிருந்து தாஜ்மஹால் மீது களிமண் பூசி அதன் மீதான தூசு, கறைகளை நீக்க இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முயற்சித்து வருகிறது. இந்நிலையில் பெருகி வரும் பூச்சிகளின் கழிவுகளால் இந்த நிற மாற்றம். ‘‘யமுனா ஆற்றின் மாசுபட்ட நீரில் உருவாகும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு இது...’’ என்கிறார் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் வல்லுநரான கே.பட்நாகர்.

Goeldichironomous எனும் பூச்சிதான் தாக்குதலின் தளபதி. ஆண்டின் ஐந்து மாதங்களுக்கு தொடர் தாக்குதல் நடத்துவது இவ்வகை பூச்சியினம்தான். ‘‘தாஜ்மஹாலுக்கு வெளியே செயல்பட எங்களுக்கு அனுமதி இல்லை. இப்பிரச்னை பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்...’’ என்கிறார் பட்நாகர்.

ரோனி