சாக்குப்பையில் 150 கோடி!உத்தரப்பிரதேசத்தில்தான் இந்தக் கூத்து. அங்குள்ள கர்ரோட்டிலுள்ள பொதுத்துறை வங்கிக் கிளைக்குச் சென்ற மங்கள்சிங்கை வங்கியே விநோதமாகப் பார்த்தது.

தன் கையில் கோணிச்சாக்குகளை வைத்திருந்த மங்கள்சிங், தன் கணக்கிலுள்ள 150 கோடி ரூபாயை எடுக்கப்போகிறேன் என வீராப்பாகச் சொல்லி  சலான்களையும் நிரப்பத் தொடங்கிவிட்டார். வங்கி கேஷியரும், மேனேஜரும் மங்கள்சிங்கின் கணக்கைத் தோண்டித் துருவியதில் அதில் நயாபைசா  கூட இல்லை என்பதும் 2016ம் ஆண்டிலிருந்து கணக்கு இயக்கப்படவில்லை என்றும் தெரிந்தது. ஆனால், மங்கள்சிங் பணத்தைக் கொடுத்தால்தான்  போவேன் என அடம்பிடிக்க, போலீஸ் வந்தபின்தான் அவர் மனநிலை பாதிப்புக்குள்ளானவர் எனத் தெரிந்திருக்கிறது. நீரவ்மோடிக்கு அடுத்தபடியாக  நேர்மையாகக் கடன்கேட்டது மங்கள்சிங்தான்!  

ரோனி