இந்தியாவில் குழந்தை திருமணம்!



இந்தியாவில் குழந்தைதிருமணம் 50 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக குறைந்துள்ளதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்காக மகிழ முடியாது. ஏனெனில் இந்தியாவில் இன்றும் ஐந்தில் ஒரு பெண் குழந்தைக்கு திருமணமாகிறது என்பதே இதன் முழுமையான அர்த்தம். உலகெங்கும் இதுதான் நிலை. ஆண்டுக்கு 1.2 கோடி பெண்கள் பதினெட்டு வயதுக்குள் திருமதியாக மாறுகிறார்களாம்.

‘‘இதனால் அவர்களது மனமும் உடலும் உருக்குலைந்து போகிறது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்துவதால் வேலைக்குச் செல்ல முடியாமல் பிறரைச் சார்ந்து வாழும் நிலைக்கு பெண் குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள்...’’ என்கிறார் யுனிசெஃப் பாலினப்பிரிவு தலைவர் அஞ்சு மல்ஹோத்ரா. இந்நிலை நீடித்தால் 2030ல் உலகெங்கும் 15 கோடி சிறுமிகளுக்கு மணமாகி இருக்கும் என்றும் யுனிசெஃப் எச்சரிக்கிறது.

- ரோனி