ஒடிஷாவின் சானிடரி பாதுகாப்பு!



ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்களை விலையின்றி வழங்கும் திட்டத்தை ஒடிஷா மாநில முதல்வர்  நவீன் பட்நாயக் தொடங்கி வைத்திருக்கிறார்.‘‘குஷி எனும் பெண்களுக்கான சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சி.

அரசு மற்றும் அரசு  உதவித்தொகை பெறும் பள்ளிகளிலுள்ள பதினேழு லட்சம் மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்!’’ என்கிறார் நவீன் பட்நாயக். மாணவிகளுக்கு  நாப்கின்கள் இலவசம் என்றாலும் மானிய விலையில் கிராமப்புறப் பெண்களுக்கும் நாப்கின்களை ஆஷா பணியாளர்கள் மூலம் ஒடிஷா அரசு வழங்கி
வருகிறது.    

- ரோனி