சின்சியர் நிருபர்!



வேலையை சீரியஸாக எடுத்துக் கொள்ளும் சிகாமணிகள் ஈரேழு லோகத்திலும் உண்டு என்பதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சின்சியர் நிருபரே சூப்பர் உதாரணம். சிட்டி 41 என்ற சேனலின் நிருபராக ஹனான் புகாரி பணிபுரிந்து வந்தார். அவருக்கு சடக்கென வரன் அமைந்து திருமணம் ஏற்பாடாக, மனுஷன் யோசிக்கவேயில்லை.

உடனே கேமராவைத் திருப்பி மைக்கை கையில் வாங்கி தன் கல்யாணத்தை தானே விஷுவல் ஸ்டோரியாக டெலிகாஸ்ட் செய்து உலகையே மெர்சலாக்கி விட்டார். கல்யாண ட்ரெஸ்ஸில் தன் உறவினர்கள், காதல் மனைவி, பெற்றோர் என அத்தனை பேரிடமும் ‘ஹவ் டூ யூ ஃபீல்?’ என பேட்டி கண்டு வெளியிட்ட செய்திதான் இணையத்தில் சென்சேஷனல் ஹிட்!  

- ரோனி