ஐந்து ரூபாய்க்கு விமானப் பயணம்!



மத்தியப் பிரதேச மாநில இந்தூரில் நடைபெற்ற மேனேஜ்மென்ட் அசோசியேஷன் விழாவில் பேசிய மத்திய விமானத்துறை அமைச்சரான ஜெயந்த் சின்கா, ‘‘முன்பு பதினொரு கோடியாக இருந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை இன்று 20 கோடியாகி இருக்கிறது. ஒரு கிலோமீட்டருக்கு ஐந்து ரூபாய் செலவழித்தால் விமானத்தில் செல்லலாம்.

ஆனால், ஆட்டோவில் போக எட்டு ரூபாய் கேட்பார்கள்...’’ என குபீர் கணக்கை அடுக்கினார். அதோடு பகோடா விற்பவர்கள் தினசரி ரூ.200 சம்பாதிக்கும் தொழில்முனைவோர் என பிரதமர் பேசியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘‘தினசரி பகோடா விற்றால் நாளை அவர் மெக்டொனால்ட்ஸ் போல கடை வைப்பார். இது வளர்ச்சிதானே?’’ என்று பேசி கிறுகிறுக்க வைத்திருக்கிறார்!

- ரோனி