ஐந்து ரூபாய்க்கு சோறு!அனலாகக் கொதிக்கும் ஏழைகளின் வயிற்றை அன்ன தாதாவாக மாறி சாந்தி செய்கிறார் நொய்டாவைச் சேர்ந்த அனூப் கன்னா. தினசரி ஐநூறு பேருக்கு ‘Dadi Ki Rasoi’ என்ற பெயரில் ஐந்து ரூபாய்க்கு அன்னமிடுகிறார். சாப்பாடு, பருப்புக்குழம்பு, ரொட்டி, காய்கறிகள் என வெரைட்டி விருந்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக அளித்து வருகிறார் அனூப் கன்னா.

‘‘அப்பா சுதந்திரப்போராட்டத் தியாகி. சமூக செயல்பாடுகளில் அவர் காட்டிய ஈடுபாடு என்னை இந்த ஹோட்டலை தொடங்க வைத்தது...’’ என்கிறார் அனூப். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த ஹோட்டல் செயல்படுகிறது. துணிகள், புத்தகங்கள், ஷூக்கள் ஆகியவற்றை வழங்கும் ‘சத்பவனா ஸ்டோரை’யும் இவர் நடத்தி வருகிறார்.

- ரோனி