இந்து குழந்தைகளை தத்தெடுத்த முஸ்லீம்கள்!பிரிவினை வெறியூட்டி லாபம் சம்பாதிக்க அரசியல் கூட்டம் அலைந்தாலும் மனிதநேய மனிதர்கள் அதற்கு சரியான பதிலடி களை அவ்வப்போது கொடுக்கிறார்கள் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம். தெற்கு காஷ்மீரிலுள்ள லியூடோராவில் தன் கணவர் இறந்தபின் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார், பேபி கவுல். கூலித் தொழிலாளியான பேபி கவுல் திடீரென இறந்துபோக, நான்கு குழந்தைகளும் அனாதையாகி தவித்து நின்றனர்.

அப்பகுதியிலிருந்த முஸ்லீம் குடும்பங்கள் பண்டிட் இனத்தவரான அக்குழந்தைகளைத் தத்தெடுத்து அரவணைத்ததுதான் இணையத்தில் வைரல் வரவு. ‘‘நாங்கள் பணக்காரர்களல்ல. அதற்காக சும்மா இருக்க முடியாது. அக்குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவது எங்கள் கடமை...’’ என்கிறார் அக்குழந்தைகளின் கார்டியனான அகமது. குழந்தைகளுக்கு தனி வங்கிக்கணக்கு தொடங்கி அதில் ஐம்பதாயிரம் பணத்தை டெபாசிட் செய்து, வசிக்க வீட்டையும் தயார் செய்து கொடுத்திருக்கின்றனர் இஸ்லாமியர்கள்.

- ரோனி