கங்கையை சுத்தப்படுத்தும் கோடீஸ்வரர்கள்!



புனிதம், புண்ணியம் என அடிக்கடி ஆரத்தி எடுத்தாலும் கங்கை கழிவுகளால் நிரம்பியுள்ளது என்பதுதான் நிஜம். இப்போது அதனை இங்கிலாந்தைச் சேர்ந்த இரு பணக்காரர்கள் பராமரிக்க இருக்கிறார்கள். வேதாந்தா, ஃபார்சைட் குரூப் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அனில் அகர்வால், ரவி மல்கோத்ரா ஆகியோர் முறையே பாட்னா மற்றும் கான்பூர் பகுதி நதிப்பரப்பை தூய்மையாக பராமரிக்கும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

இதற்கு மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஓகே சொல்லியுள்ளார். க்ளீன் கங்கா திட்டத்திற்கு அரசு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அனில் அகர்வால் பாட்னாவிலும், ரவி கான்பூரிலும் பிறந்து இங்கிலாந்தில் செட்டிலானவர்கள். நிதின் கட்கரி, லண்டனில் நடந்த 30வது சர்வதேச கடல்சார்அமைப்பு கூட்டத்தில் பங்கேற்றபோது க்ளீன் கங்கா பிளானில் பங்கேற்க இந்தியர்களை அழைத்ததால் கிடைத்த உதவி இது.    

- ரோனி