Life Boat!ரீடர்ஸ் வாய்ஸ்

தீரனின் மேக்கிங்கை வினோத்தின் பேட்டியில் படித்துவிட்டு பிரமித்துப்போனோம்
- மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; சிவக்குமார், திருச்சி; மணிமாறன், திருவண்ணாமலை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

வெள்ளத்திலிருந்து சென்னையைக் காப்பாற்றுவதற்காக ‘குங்குமம்’ தந்த தகவல்கள் அனைத்தும் லைஃப் போட் உதவியாய் சந்தோஷம் தந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ராமகண்ணன், திருநெல்வேலி.

ஓவன் இல்லாமல் கேக் செய்யும் முறையை சொல்லியிருந்தால் என் வொஃய்பின் தொண தொண கேள்வியிலிருந்து தப்பியிருப்பேனே ஐயா!
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

சௌமியமூர்த்தி தொண்டைமானின் பெயரை தமிழர்களின் இதயத்திலிருந்து நீக்க முடியாது.
- மனோகர், கோவை; மூர்த்தி, பெங்களூரூ.

‘ஷூட் தி பப்பி’ சிறுகதை உயிரோட்டமான வார்த்தைகளில் சோக கவிதை.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

பர்ஃப்யூம் பற்றிய கட்டுரை மணம் வீச வைத்தது.
- அக்‌ஷயா, திருவண்ணாமலை; பூதலிங்கம், நாகர்கோவில்.

தொப்பை டிப்ஸ்கள் படித்து தொந்தி குலுங்க சிரித்தோம். இதுகூட நல்ல டிப்ஸ்தானே!
- த.சிவக்குமார், திருச்சி; மணிமாறன், திருவண்ணாமலை; சத்தியநாராயணன், சென்னை; நவாப், திருச்சி.

மெனோபாஸ், பாடல் என்ற இரு கவிதைகளும் அட்டகாச அசத்தல்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘ஊஞ்சல் தேநீரி’ல் யுகபாரதியின் வரிகள் ஒவ்வொன்றும் வைரமாக மின்னியது. உதாரணம் ராமநாராயணன் சொன்னது.
- இசக்கிபாண்டியன், திருநெல்வேலி.

சினிமாவில் 5 டைரக்டர்ஸ் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்களா என வியக்க வைத்துவிட்டனர்.
- எஸ்.பிரீத்தி, செங்கல்பட்டு.

காட்டைக் காக்க அரும்பாடு படும் ஜார்க்கண்டின் ஜமுனாவை பாராட்ட வார்த்தைகளில்லை.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; கார்த்திகா, திருவண்ணாமலை; த.சத்தியநாராயணன், அயன்புரம். ஜானகி ரங்கநாதன், சென்னை.

‘அறிந்த இடம் அறியாத விஷய’த்தில் திரிசூலம் பற்றிய செய்திகள் அற்புத ஆவணமாக வெளிவந்துள்ளது.
- செல்வராஜ், விழுப்புரம்; சிவகார்த்தி, புறத்தாக்குடி; ப்ரீத்தி, செங்கல்பட்டு; நடராஜன், திருமுல்லைவாயில்; ஜானகி ரங்கநாதன், சென்னை; ஜெரிக், கதிர்வேடு; மனோகர், கோவை; அத்விக், அசோக்நகர்; பூதலிங்கம், நாகர்கோவில்.

‘அறம்’ மணிகண்டனின் உயிர் மீட்புக்குழு மணிமகுடம் தரவேண்டிய உன்னதமான பணி.
- மயிலை கோபி, அசோக்நகர்; சைமன் தேவா, விநாயகபுரம்; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக ரயிலில் பிச்சை எடுத்த சந்தீப் தேசாய், பாராட்டுக்குரிய அரிய மனிதர்.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்.