ஐபோன் உருளைக்கிழங்கு!



ஆப்பிளுக்கு பதிலாக ஏழைகளின் ஆப்பிள் என பேரிக்காயை கொடுத்தாலே டென்ஷன் நமக்கு உச்சிமுடிக்கு எகிறும். அப்படியிருக்க ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் டுபாக்கூர் பொருளை கொடுத்தால் எப்படியிருக்கும்? அமெரிக்காவின் விஸ்கான்சினைச் சேர்ந்த பெண்ணுக்கு ஐபோன் 6 வாங்குவது ஆயுள் கனவு. தன் வீட்டிற்கு அருகில் பிளாக் ஃப்ரைடே விற்பனை பற்றிய போஸ்டர்களை பார்த்தவர், அங்கு சென்றார்.

ட்ரக்கில் உடைகள், எலக்ட்ரானிக் பொருட்களை எது எடுத்தாலும் இவ்வளவு... ஸ்லோகனுடன் பரபரவென விற்றுக்கொண்டிருந்தனர். அங்கே வைத்திருந்த ஐபோன் 6-ஐ, ரூ.6 ஆயிரம் கொடுத்து வாங்கினார். வீட்டுக்கு வந்து பாக்ஸை திறந்தார்... ஷாக்கானார். காரணம், நீட்டாக நறுக்கிய 11 உருளைக்கிழங்கு துண்டுகளோடு ஆண்ட்ராய்ட் சார்ஜரும் அதில் இருந்தது!                              
                    

- ரோனி