வாங்க SMS பண்ணலாம்!



Short Message Service. இதன் சுருக்கம்தான் SMS. இப்படி மினிமைஸ் செய்வதன் எக்ஸ்டென்ஷன்தான் Omg, Lol, Rofl, Brb... இப்படி நம்மால் முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளையும், வரிகளையும் ஓரிரு எழுத்துகளில் அசால்ட்டாக அடக்கி விட்டோம்.

‘என் கேர்ள்ஃப்ரெண்ட் இப்படிதான் பேசி சாவடிக்கிறா!’ என புலம்புகிறீர்களா? CMON (Come On). இதெல்லாம் JK (Just Kidding) SMS மொழிகள். வாங்க கத்துக்கிட்டு பலரை சுத்தலில் விடலாம். அத்துடன் வாட்ஸ் அப் ஸ்மைலிகளுக்கான அர்த்தங்களையும் சலுகையாகச் சேர்த்துக் கொள்வோம்.

LOL - Laughing Out Loud.
ROFL/ ROTFL - Rolling On Floor and Laugh.
OMG - Oh My God!
BRB - Be Right Back. இதற்கு பதில் TYT - Take Your Time.
ASAP - As Soon As Possible.
A3 - Anytime, Anywhere, Anyplace.
ACD - Alt + Ctrl + Delete.
GR8 - Great
ItsK - It’s Okay.

இவை தான் கொஞ்சம் அதிகம் பயன்படுத்தப்படும் சுருக்கமான SMS மொழிகள். உண்மையில் இன்னும் இருக்கின்றன. இதை வைத்து உங்கள் கேர்ள் / பாய் ஃப்ரெண்டையோ அல்லது வாட்ஸ் அப் நண்பர்கள் / குரூப்பையோ ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம். ஏனெனில் இப்போதெல்லாம் SMS’ல் எவ்வளவு அதிகமாக சுருக்கமான வார்த்தைகள் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாம் மெத்தப் படித்த மேதாவிகள்!இதனை Acronyms அல்லது SMS Shorthand என்கிறார்கள்!! 

B4 - Before.
NTHN - Nothing.
RUK? - Are you Ok.
R - Are.
8 - Ate.
B - Be.
BCNU - Be Seeing You.
BTW - By the way. 
QT - Cute.
D8 - Date.
DNR - Dinner.
EZ - Easy.
XLNT - Excellent.
F8 - Fate.
4 - For.
FYI - For Your Information.
L8 - Late.
L8R - Later.
M8 - Mate.
PLS - Please.
OO - Over and Out.
OTT - Over The Top.
PCM - Please Call Me.
Q  - queue.
R8 - Right.
C - See.
CU L8R  - See You Later.
SPK - Speak.
TC - Take Care.
T - Tea.
THX - Thanks.
THNQ - Thank you.
2 - To.
2B - To Be.
2DAY - Today.
2MORO - Tomorrow.
WAN2 - Want to.
WAT / WT - What.
WRK - Work.
Y - Why
U - You.
AFK - Away From Keyboard.
IMHO - In My Humble Opinion.
BFF - Best Friend Forever.
WTF - What the Fish? (ஓவியா ஸ்டைல் கெட்ட வார்த்தை!).
BF - Best Friend / Boy Friend.
GF - Girl Friend.

ஷாலினி நியூட்டன்