மலையில் குறும்பு!உலகத்தை உற்று கவனிக்க வைக்க குட்டிச்சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பது, குழந்தைகளுக்கு பேனா - பென்சில் தருவது என சில்லறை அலம்பல்கள் ஓகே.

அதற்காக இப்படியா செய்வது?

ஆஸ்திரியாவிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் ஆஸ்ட்சர் பகுதியில் மரத்தினால் உருவான கலைச்சிற்பம் டூரிஸ்டுகளை இன்ஸ்டன்ட்டாக  அதிர்ச்சியடைய வைக்கிறது. 6200 அடி உயர மலையில் மரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆண்குறி சிற்பம் அங்கிருப்பதுதான் பரபரப்புக்கு காரணம்.

இதனை அரும்பாடுபட்டு உருவாக்கி மலையில் கருத்தாக ஊன்றி வைத்த சிற்பியைத்தான் உலகமே கண்ணில் கைகுவித்து தேடிவருகிறது.

ஆல்ப்ஸ் மலையின் புதிய லோகோவாகவே இந்த மரச்சிற்பம் மாறிவிட்டது. அடுத்த வெகேஷனில் புயல் வந்து சிற்பத்தை சாய்ப்பதற்குள் பார்த்துவிடுங்கள் மக்களே!                   

ரோனி