பரவசம் டூ பஜனை!புது வசதிகளுக்காக ஆப்ஸ் என்ற வழக்கத்தை உடைத்தெறிந்து இந்தியர்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்று உழைக்கும் புனித ஆத்மாக்களுக்கு இந்தியாவில் பஞ்சமா என்ன?

அந்த கேட்டகிரியில் சீட் ரிசர்வ் செய்திருப்பவர்தான் டாக்டர் விஜய்நாத் மிஸ்‌ரா. ‘ஹர ஹர மகாதேவ்’ என்று பெயரிட்டு ஆப்பை உருவாக்கியிருக்கும் விஜய், பனாரஸ் இந்து பல்கலையின் நரம்பியல்துறை வல்லுநர்.

எதற்கு இந்த ஆப்?

கிளுகிளு வீடியோக்களை எப்போதெல்லாம் நம் விரல்கள் டைப் செய்கிறதோ அப்போதெல்லாம் இந்த ஹரஹர ஆப்பில் பக்தி பஜனைகள் ஸ்டார்ட் ஆகுமாம்!

‘‘தினசரி ஆபாசத்தளங்களை அடையாளம் கண்டு நீக்கி வருகிறோம். விரைவில் பிற மத பாடல்களும் ஆப்பில் ஒலிக்கும்!’’ என சீரியஸாக பேசுகிறார் சுவாமிஜி, சாரி டாக்டர் விஜய்நாத் மிஸ்‌ரா.                    

ரோனி