ஹானஸ்ட் லேடி!- ரோனி

நுரையீரல் கெட்டுப்போன முகேஷ் லைவில் வந்து தியேட்டரில் பாடம் எடுத்தாலும் சிகரெட்டை விடாதவர்கள், இனி கண்டிப்பாக சிகரெட் பிடிக்க இருமுறை யோசிப்பார்கள். ஆஸ்திரேலியாவின் கிளாரே வெய்ன்ரைட்டுக்கும் சூப்பர் கிஃப்ட் வந்தது. எங்கிருந்து? வங்கியிலிருந்து! ஆஸ்திரேலியா தேசிய வங்கியில் வந்த லெட்டரைப் படித்து கிளாரேவுக்கு ஹார்ட் அட்டாக் வராததுதான் குறை.

‘உங்கள் அக்கவுண்டில் 25,102,107 டாலர்கள் உள்ளது!’ என சொன்னால் மனம் கொக்கோகோலாவாய் பொங்காதா? லெட்டர் வந்தவுடன் நேர்மையாக செயின்ட்ஜார்ஜ் பேங்கை தொடர்புகொண்டாலும் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. அக்கவுண்டை செக் செய்தால் லெட்டரில் காட்டிய அமௌண்ட் அப்படியே டிட்டோ. 2,500 டாலர்களை அனுப்புவதற்கு பதில் குளறுபடியாக கைமாறிய பணத்தை ரிவர்ஸ் பண்ணி கருவூலத்திற்கு மீட்ட தேசியவங்கி, நடந்த தவறுக்கு வருந்துகிறோம் என்று சொல்லியுள்ளது.