சிகரெட் ஹாலிடே!நுரையீரல் கெட்டுப்போன முகேஷ் லைவில் வந்து தியேட்டரில் பாடம் எடுத்தாலும் சிகரெட்டை விடாதவர்கள், இனி கண்டிப்பாக சிகரெட் பிடிக்க இருமுறை யோசிப்பார்கள். காரணம், ஜப்பான் கம்பெனியின் ஆச்சர்ய ரூல்ஸ்! டோக்கியோவைச் சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான பியாலா, சிகரெட் பிடிக்காத ஊழியர்களுக்கு 6 நாட்கள் பெய்டு லீவ் தந்து அசத்தி யுள்ளது.

29ம் மாடியிலுள்ள நிறுவனத்தில் தரைத்தளத்தில் புகைபிடிப்பதற்கான தனி ரூம் உண்டு. அடிக்கடி அங்கு செல்வதால் வேலை கெடுகிறது என புகார் சொன்ன ஊழியரின் ஒப்பீனியனைக் கேட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி பிளான் இது. இப்போது புகைபிடிக்கும் 42 பேரில் 4 பேர் அதனை விட்டுள்ளனர். மாற்றம் முன்னேற்றம்தானே!

- ரோனி