பாலில் பாய்ஸன்!பாலில் பாய்ஸன் கலந்தது அரசியல்வாதிகளல்ல. கட்டிய வொய்ஃப்தான்! பாகிஸ்தானைச் சேர்ந்த ஆஸியா, தன் ஆசைக் கணவன் அம்ஜத்துக்கு பிரியமாக பாலைக்கொடுக்க, அவர் எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார். அடுத்தநாள் ஆஸியாவின் மாமியார் அதே பாலில் லஸ்ஸி போட்டுக் கொடுத்தார். லஸ்ஸியை சப்புக்கொட்டி குடித்த 27 பேரில் 13 பேர் பரலோகம் சேர்ந்துவிட்டனர். மீதிப்பேர் உயிரும் ஊசலாடுகிறது.

முதலில் பாலில் பல்லி என ரீசன் சொல்லிய ஆஸியா, போலீஸ் என்கொயரிக்குப் பின்னர் தன் லவ்வர் கொடுத்த விஷத்தை பாலில் கலக்கினேன் என உண்மையைச் சொன்னதும் ஊரே ஷாக்காகி விட்டது. கட்டாய மேரேஜ் விவகாரத்தில் பாய்ஸன் கலப்பது அங்கு மிக சகஜமாம்.

- ரோனி