செல்ஃபீ வித் பசுமாடுஅரியானாவில் அமைக்கப்பட்ட பசு ஹாஸ்டல்களுக்கு அடுத்து, கொல்கத்தாவில் பசுநேச பிளானாக, பசுவோடு ஒரு செல்ஃபீ திட்டத்தை என்ஜிஓ ஒன்று முன்னெடுத்துள்ளது. கோசேவா பரிவார் அமைப்பு, யூத்களிடையே செல்ஃபீ போட்டி வரவேற்பு பிரமாதம் என பூரிக்கின்றனர். 2015ம் ஆண்டிலிருந்து கோமாதாக்களுக்கான அசகாய போட்டியை நடத்திவரும் இவ்வமைப்பு, பசுக்கள் வெறும் இறைச்சிக்கானவை மட்டுமல்ல என்பதைக் கொள்கையாகக் கொண்டது.

‘‘பசு பாதுகாப்பை மதம் அல்லது அரசியலோடு இணைத்துப் பார்ப்பது தவறு. சமூக மற்றும் அறிவியல் துறைகளில் பசுக்களுக்கு பெரும் பங்குண்டு...’’ என்கிறார் கோசேவா பரிவார் அமைப்பைச் சேர்ந்த அபிஷேக் பிரதாப் சிங். கோசேவா ஆப்பை டவுன்லோடு செய்து செல்ஃபீ படத்தை அப்லோட் செய்து பசுக்களை காக்கும் வசதியையும் இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.