ரீல் சினிமாவில் ரியல் போலீஸ்!ரீல் லைஃபும் ரியல் வாழ்வு அபத்தமும் இணைந்தால் குழப்பம் ஏற்படுவது சகஜம்தானே? அமெரிக்காவிலும் அப்படியொரு சின்ன குழப்பம் ஏற்பட்டுவிட்டது. விளைவு, போலீஸ் துப்பாக்கிச்சூடு வரைக்கும் சென்றுவிட்டது. இண்டியானா பகுதி ஹோட்டலில் மாஸ்க் அணிந்த மனிதர் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார்.

அங்கு ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு அதைப் பார்த்ததும் நெஞ்சு விம்மி மூக்கு புடைத்து ‘நம்முடைய ஏரியாவில் திருடனா?’ என கோபத்துடன் சுட்டார். பாய்ந்த புல்லட்டில் இருந்து அசகாய முயற்சி செய்து தப்பித்தார் மாஸ்க் மனிதர். அடுத்த ரவுண்டுக்கு போலீஸ் புல்லட் தேட... பதறிய மாஸ்க் மனிதர், ‘சார் இது சினிமா ஷூட்டிங். என் பெயர் ஜெஃப் டஃப்...’ என கெஞ்ச... அசடு வழிந்த போலீசின் கோபம் மெல்ல தணிந்தது!