லண்டனில் கையேந்தி பவன்!லண்டனில் பொருளாதார மந்த நிலை வரும்வரை ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்த மும்பை பூர்வீகவாசியான சுஜய் சோஹானிக்கு எல்லாமே சந்தோஷ மொமண்ட்தான். அதே நிலையில்தான் அவரது கல்லூரி நண்பரான சுபோத் ஜோஷியும் இருந்தார். வேலை பறிபோன நிலையில் என்ன செய்வது என இருவரும் தவித்தபோதுதான் வடாபாவ் விற்கும் ஐடியா உதித்தது.

2010ம் ஆண்டு விநாயகரை வலம் வந்து கடைக்கு பூஜை போட்டு வடாபாவை பாதசாரிகளுக்கு சாம்பிள் கொடுத்தார்கள். பர்கரில் புது வெரைட்டியா? வியந்தவர்களின் ரியாக்‌ஷனைப் பார்த்தே நிம்மதி ஆனவர்களின் சுறுசுறு உழைப்பில் ஏழு ஆண்டுகள் கடந்ததே தெரியவில்லை. இன்று 60 வகை இந்திய ஸ்ட்ரீட் உணவுகளை 35 ஊழியர்களை பணியமர்த்தி லண்டன்வாசிகளுக்கு பரிமாறி இருவரும் சம்பாதித்தது மட்டும் ஆண்டுக்கு ரூ.4.39 கோடிகள்!  

- ரோனி