இது அமைதிப்புறா அல்ல!இங்கிலாந்தைச் சேர்ந்த மார்க் அண்ட் ஸ்பென்சர் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உடைகளைத் தூசு தட்டுவதைவிட அங்கு வந்து உட்கார்ந்து லந்து செய்யும் மர்மப் புறாவை விரட்டியே தாவு தீருகிறது அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு.

வெளியே விரட்ட ஊழியர்கள் செய்யும் அத்தனை முயற்சிகளையும் சிம்பிளாக ஊதித் தள்ளிவிட்டு அடுத்த செக்‌ஷனில் போய் உயரமாய் அமர்ந்து இளைப்பாறும் புறாவின் வீடியோ இணையத்தில் மிஸ்ட்ரி ஹிட். எங்கிருந்து இந்தப்புறா வருகிறது, சொல்லி வைத்தது போல ஒரே கட்டையைச் சுற்றி வரக்காரணம் என்ன என்பதெல்லாம் புரியாமல் திருதிருவென விழிக்கிறார்கள் ஊழியர்கள்.  

- ரோனி