ஜிப்ஸி இந்தியர்!உலகம் சுற்ற கையில் பணமும், வைராக்கிய மனமும் தேவை. அதையும் அட்வென்ச்சராக மாற்ற முடிந்தால் நீங்கள்தான் அடுத்த துருபாத் மிஸ்ட்ரி. குஜராத் மனிதரின் அண்மைய அட்வென்ச்சர் பயணம் சீட் நுனி த்ரில் சுவாரசியம்.

லண்டனில் வேலை செய்து வந்த துருபாத் மிஸ்ட்ரிக்கு, இந்தியாவில் செட்டிலாக ஆசை. இதையே சாகசப் பயணமாக மாற்ற, பொதுப் போக்குவரத்தை (பஸ்,ரயில், டாக்சி, ஒட்டகங்கள்) பயன்படுத்தி 14 நாடுகள், 21 ஆயிரம் கி.மீ.களைக் கடந்து இந்திய மண்ணை முத்தமிட்டிருக்கிறார்! கடந்த மே 25 அன்று ராவுல், வானெடியா, மிஸ்ட்ரி என மூன்று நண்பர்களாக கிளம்பினாலும் இடையில் ராவுலும் வானெடியாவும் கழன்று கொள்ள, சைபீரியா, சீனா, திபெத் என சுற்றி நாற்பது நாட்களுக்குப் பிறகு ஜூலை 3 அன்று, தான் பிறந்த உதய்ப்பூர் மண்ணை மிதித்திருக்கிறார் மிஸ்ட்ரி.  

- ரோனி