ஜாக்கி ஜம்ப்!கிங் சைஸ் வாழ்க்கை வாழ யாருக்குத்தான் ஆசையில்லை. ஆனால், அதற்கும் பில் போட்டால் மனசு தாங்குமா? அப்படி இளகிய மனசுக்காரர் செய்த வேலைதான் வீடியோவாகி உலகையே வயிறு வலிக்க சிரிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவின் க்யூஸ்ஹாவ் பகுதியைச் சேர்ந்த சுகவாசி ஒருவர் நட்சத்திர ஹோட்டலில் 19வது மாடியில் ஜாலியாக சுஹானுபவத்தை அனுபவித்து வந்தார்.

ஹோட்டல் நிர்வாகம், பில் கொடுத்து பணம் கேட்டதும் டென்ஷனானவர், அங்கிருந்து அப்படியே ஜாக்கிசான் போல் அடுத்த கட்டடத்துக்கு தாவ ஜம்ப் செய்தார். ஆனால், டெலிபோன் வயரில் சிக்கிக்கொண்டார். பின் ஃபயர் சர்வீஸ் ஆட்கள் வந்து அவரை மீட்டனர்! தங்கியதற்கு பணம் கேட்டது குத்தமா?!