சீட்பெல்ட் பெனால்டி!லைசென்ஸ் கொண்டு வரவில்லையா? நிச்சயம் ட்ராஃபிக் போலீஸ் வார்னிங் கொடுத்து பெனால்டி விதிப்பார்கள். ஆனால், அதுவே ஆபீசில் தவறு செய்தால் என்ன செய்வார்கள்? சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் சுவரில் டேப் வைத்து ஒட்டப்பட்டு இருக்கும் போட்டோவை வெளியிட்டு ‘‘பாருங்கள், என் சக ஆபீஸ் நண்பர்கள் என்னை கண்டுகொள்ளாமல் வேலை செய்கின்றனர்...’’ என பதிவிட்டிருந்தார்.

இப்படியொரு தண்டனை எதற்கு? சுவரில் ஒட்டப்பட்டிருந்த பெண் ஆபீசுக்கு வரும்போது காரில் சீட்பெல்ட் அணியவில்லையாம். இந்த விஷயம் கம்பெனிக்குத் தெரிய வர... இந்த கறார் தண்டனை. 11 am - 5 pm வரை செயல்படும் ஆபீசில் தாமதமாக வருவது, முன்னமே கிளம்புவது ஆகியவற்றுக்கும் இதேபோல ஸ்பெஷல் தண்டனைகள் உண்டு என ரூல்ஸ் லிஸ்ட்டையும் ரிலீஸ் செய்து திகில் கிளப்பியுள்ளார் இந்த லேடி. 

- ரோனி