ரெஸ்யூம் பாடகர்!ரெஸ்யூமை கிரியேட்டிவ் கில்லியாக ரெடி பண்ணி ஜாப் வாங்குவதுதான் இன்றைய ட்ரெண்ட். அதை ஏன் பேப்பரில் ஆர்டினரியாகத் தரவேண்டும் என யோசித்த அபூர்வ சிந்தாமணி டாவெய்ன் கிர்க்லாண்ட் என்ன செய்தார் தெரியுமா? அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த டாவெய்ன் கிர்க்லாண்ட், இந்தாண்டுதான் தனது டிகிரியை முடித்தார். வேலை அனுபவம் வேண்டுமே?

தனக்கு மிகவும் பிடித்த வெய்னர் மீடியா என்ற டிஜிட்டல் ஏஜன்சிக்கு இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க கிரியேட்டிவாக விரலால் நெற்றிப்பொட்டைத் தட்டி யோசித்தார். கிடைத்தது ஐடியா. பாடகர் கென்ட்ரிக் லாமரின் டிஎன்ஏ பாடலின் மெட்டில் அப்படியே ரெஸ்யூமை பாடலாக மாற்றி யூ டியூப்பில் ஏற்றிவிட்டார். வேலை கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் இப்போது மனிதரின் யூ டியூப்தான் வைரல்!