டாக்டர்களுக்கு ஃபைன்!- ரோனி

கடவுளுக்கு அடுத்து டாக்டர்களை மக்கள் மதித்தாலும் ரெகுலராக இவர்களுக்குள் தகராறு ஏற்படுவது வாடிக்கை. சீனாவின் ஹியூபெய் நகரிலுள்ள ஸோங்னன் மருத்துவமனையில் நுரையீரல் அடைப்பு காரணமாக அட்மிட் ஆனார் லீ. டாக்டர்களும் ஐசியூவில் வைத்து ஆபரேஷன் செய்து ஆவி பிரியாமல் லீயைக் காப்பாற்றி விட்டனர்.

அவரது அப்பாவுக்கு, மகன் பிழைத்ததில் ஹேப்பி என்றாலும் ஆபரேஷன் அவசரத்தில் மகன் அணிந்த சட்டையை டாக்டர் வெட்டி நாசம் செய்திருப்பதைக் கண்டு டென்ஷன் ஆகி, ரூ.9,820 இழப்பீடு கேட்டு அதை வாங்கியும் விட்டார். எப்போதும் பில் எழுதி சொத்தை வாங்கிவிடும் டாக்டர்களிடம் ஒருவர் பணம் வாங்கியது சீனாவையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.