தலையில் ஆபரேஷன், வாயில் சாக்‌ஸபோன்!



நியூயார்க்கில் வசிக்கும் டான் ஃபேபிபோ, பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக பணிபுரிகிறார். கூடவே இசையில் முதுகலை படிப்பு. திடீரென்று அவருக்கு தலை வலித்திருக்கிறது. கட்டி இருப்பதாக ஸ்கேன் சொன்னது. அதுவும் அவருக்கு இசைத்திறன் இருக்கும் பகுதியில். துடித்துப் போனார் டான் ஃபேபிபோ. 25 வயதில் இப்படியா..?விரக்தி அடைந்த ஃபேபிபோவிடம் மருத்துவர்கள் சொன்ன யோசனைதான் ஹைலைட்.

‘நாங்கள் ஆபரேஷன் செய்யும்போது நீங்கள் சாக்ஸபோனை வாசியுங்கள்..!’ போதாதா? ஃபேபிபோவும் கர்ம சிரத்தையாக கொரியன் நாட்டுப்புற பாட்டை ஆபரேஷன் தியேட்டரில் வாசித்திருக்கிறார். ஆபரேஷன் சக்சஸ்!

ரோனி