குணம் நாடி...



எனது அறுபது வருட அனுபவத்தில் என்னிடம் இப்படி ஓர் வழக்கும் வந்ததில்லை. விசாரணையும் நடந்ததில்லை.என் நிறுவனத்தில் எழுபது பொறியாளர்கள்; இரண்டு ஷிப்டு பணி. கோடிக் கணக்கில் வர்த்தகம்.

மனிதவள மேம்பாட்டு வல்லுனர்களின் வழிகாட்டுதலில் இளம் புத்திசாலி ஆண், பெண்களை மொழி, பிரதேச பேதமின்றிப் பணியமர்த்திச் சிறப்பான பெயர் எடுத்த நிறுவனம். தொலைத்தொடர்புத் துறையிலும் அகில இந்திய அளவில் பலமுறை தேசிய விருது பெற்றுள்ள எனது நிறுவனம் சென்னைத் தொழில் பூங்காவில் உயர்ந்தோங்கி நிற்கிறது.

இன்றிங்கே புதிய காளான்களாய்ப் பல நிறுவனங்கள் தோன்றி மறைந்தாலும் தனித்த முத்திரையுடன் மெது மெதுவாய் மேலோங்கி வளர்ந்தது எங்கள் நிறுவனம். கை நிறைய சம்பளமாய் சம்பாதித்ததை உதறிவிட்டு, தொலைநோக்கு நுண்ணுணர்வால் உந்தப்பட்டு என் உழைப்பையும் திறமையையும் மட்டுமே நம்பி சிறிய நிறுவனமாய் ஆரம்பித்தேன் அன்று.

இன்று பல குடும்பங்களுக்கு எனது நிறுவனம் ஓர் அச்சாணி. ‘பணிப் பாதுகாப்பு’ என்பது எனக்குப் பிடிக்காத கெட்டவார்த்தை! ‘அர்ப்பணித்த உழைப்பு’ என்பதே என் தாரக மந்திரம். ‘கடமைக்கேற்ற உரிமை’ என்பது செயல் திட்டம்.

கிண்டிக்கும் அடையாறுக்கும் இடையில் கருவேலங்காடாய்க் கிடந்த இடம் எனது கம்பெனியின் ஊற்றுக் கண்ணாகி பெரும் கட்டடமாய் உயர்ந்தது.
எனது பணியாளர்களுக்குக் கை நிறைய சம்பளம், காப்பீட்டுத் திட்டம். இன்ன பிற பொருளாதார இத்யாதிகள், பிக்அப், ட்ராப் காப்ஸ், தரமான சுவையான உணவு, இரு மாதத்திற்கொரு முறை இருநாள் சுற்றுலா.

எந்த சின்ன கவலைகளும் என் பணியாளர்களை அண்டிவிடாதபடி பார்த்துக் கொண்டேன். என் மனைவி சுகந்தி ஒருநாள் வேடிக்கையாய் பலூனைப் போட்டு உடைத்தாள். ‘‘இந்தியாவின் விலையுயர்ந்த கொத்தடிமைகளின் சொந்தக்காரர் நீங்கள். அக் கொத்தடிமைகளில் நானும் அடக்கம்!’’
அதன்பிறகு சுகந்தியிடம் எனது அணுகுமுறை கொஞ்சம் கொஞ்சமாய் லேசாகியது. துணையாய் வந்தவள் இணையாய்ப் பயணிக்கிறாள் என்னுடன்.

காப்பிக் கோப்பை சூடு கைக்கு உணர்த்தியதும் நடப்புலகிற்கு மீண்டேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை அவசியம்.
செல்பேசியில் சுகந்தியைத் தொடர்பு கொள்கிறேன். ‘‘சுகந்தி! ஆர் யு ஃப்ரீ நவ்? ஒரு அரை மணி நேரம் நீ இங்க கொஞ்சம்
வந்துட்டுப் போக முடியுமா?’’

எதிர்முனையில் கூழாங்கல்லைக் கொட்டிய சிரிப்பொலி.
‘‘நோ, நாட் ரொமான்ஸ் நவ். சம்திங் ஸம்வாட் சீரியஸ்...
வந்துடு!’’

காலையில் அலுவலகம் வந்து சிறிது நேரத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. அதைத் தொடர்ந்து ஐந்து நிமிடத்தில் மஃப்டியில் காவல் துறை அதிகாரிகள் இருவர் நேரில் வந்தனர்.என் நிறுவனப் பொறியாளர் ஒருவர் மீது குற்றச்சாட்டு ஒன்றைக் கொண்டு வந்திருந்தனர். என்னால் நம்ப இயலவில்லை. பாதிக்கப்பட்டவரின் முறையீட்டு மனுவைக் காண்பித்து விளக்கினர்.

‘‘இதுவரை இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி இங்க நடந்ததில்லை. ஆனா, சம்பவம் நடந்த இடத்துலேயே இருந்த போக்குவரத்துக் காவலரும் எதிரே பணியில் இருந்த சட்டம் ஒழுங்கு காவலருமே ஐ விட்னஸ் இதுக்கு. புகார் தந்தவரும் சும்மா சொல்லலை. ஸோ... பாத்துக்குங்க. ஈவினிங் மூணு மணிக்குள்ள பதில் சொல்லுங்க. நாங்க ஆக்‌ஷன் எடுக்கணும்...’’ 

‘‘நிச்சயம் நான் மதியத்துக்குள்ளவே உங்களைத் தொடர்பு கொள்றேன். ரொம்ப நன்றி சார்.’’
அவர்கள் கிளம்பிச் சென்றதும் குற்றம் சுமத்தப் பெற்ற ராகவனை அழைத்து விசாரித்தேன்.
‘‘ஓ! இங்கயே வந்துட்டாங்களா சார்?’’

‘‘ஏன், ேநத்தே மேட்டர் முடிஞ்சுடுச்சா? இங்க வருவாங்கன்னு எதிர்பார்க்கலையா நீங்க?’’
‘‘இல்ல; ஸாரி சார்... நேத்து சாயங்காலம் நடந்தது உண்மைதான். நா் கார்ல வந்துகிட்ருந்தேன். பின்னால இருந்து டூவீலர்ல  யங்ஸ்டர் ஒருத்தர் விடாம ஹார்ன் பண்ணிக்கிட்டே வந்தாரு. நான் ஒதுங்கி வழி விடவும் இடமில்லை. ரெட் சிக்னல் வேற விழுந்திடுச்சு.

வண்டிய நியூட்ரலுக்குக் கொண்டு வந்து பச்சைக்காகக் காத்துக்கிட்டிருக்கேன். மறுபடியும் டூவீலர் பயங்கரமா ஹாரன் பண்ணிக்கிட்டே வந்து வலப்பக்கம் நின்னாரு. என் காது ஜவ்வு பிஞ்சு போற மாதிரி ஹாரன் ஒலி. எனக்குக் கோபம் வந்துடுச்சு. என்ஜினை நிறுத்தி காரை விட்டுக் கீழே எறங்கிட்டேன். அந்தப் பையன்கிட்ட, ‘ஏம்பா, எடம் இருந்தா போப் போறேன். ஏன் இப்பிடி காது கிழியிற மாதிரி ஹாரன் பண்றீங்க?’னு சத்தம் போட்டேன். ஹெல்மெட்டெல்லாம் அந்தப் பையன் போடலை. ‘ஒங்கப்பன் வீட்டுரோடா இது? ஒனக்கு மட்டுந்தான் ரோடு சொந்தமா? பேசாமப் போய்யா, துள்ளாதே!’ன்னு என் தோளைத் தட்டிவிட்டாரு.

என்ன பண்றேன்னு எனக்கே தெரியலை. அந்தப் பையன் காதை அப்பிடிேய கடிச்சிட்டேன்!’’ என்றான் ராகவன்.

‘‘என்னது?! ஒருத்தர் காதைக் கடிக்கிறதுங்கிறது எப்பிடிய்யா?’’‘‘டென்ஷன்... மிருகமாத்தான் மாறிட்டேன். அந்தப் பையன் ரத்தம் வழிய ரோட்டோரம் ஓடினாரு. பப்ளிக் ரெண்டு பேரு எனக்கு தர்ம அடி கொடுத்தாங்க. போலீஸ் வந்துடுச்சு. ஒரே ரண களம்... அந்தப் பையனை என் கார்ல ஒக்காத்தி வச்சு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன்.

போலீஸும் கூட வந்தாங்க. ஒடனடியா அந்தப் பையனுக்குத் தையலெல்லாம் போட்டாங்க. என்னையும் நல்லா வாயெல்லாம் கழுவச் சொன்னாங்க. ரெண்டு நாள் அவர அட்மிட் ஆகணும்னு சொல்லிட்டாங்க. ஆஸ்பிட்டல் செலவை ஏத்துகிட்டேன். அவுங்க வீட்டுக்கும் அவுரு தம்பிக்கும் செய்தி சொல்லி வரவழைச்சேன். போலீஸ் அந்தப் பையன்கிட்ட ரிட்டன் கம்பளைண்ட்டும் விட்னஸ் கையெழுத்தும் வாங்கினாங்க. என்கிட்டயும் கையெழுத்து வாங்கினாங்க. என்னோட பேரு, ஆபீஸ் அட்ரஸ், வீட்டு அட்ரஸ், ஃபோன் நம்பர் எல்லாம் வாங்கிக்கிட்டாங்க...’’
‘‘நவ் யு கேன் கோ... ஐ வில் கால் யு சம் டைம் ேலட்டர்...’’

ராகவன் சென்றதும் குளிர் அறைக்குள்ளும் குப் என வேர்த்தது.ராகவனின் தலைமையதிகாரியையும், நிறுவன எச்.ஆரையும் அழைத்தேன். ஒர்க்கஹாலிக், உண்மை ஊழியர், கொஞ்சம் மூடி டைப், இதுவரை ஏதும் கரும்புள்ளி பெறாதவன் என்று சான்று பகர்ந்தனர். அவர்களை அனுப்பிவிட்டுக் கணினியில் ராகவனின் பதிவேட்டை ஆதியோடந்தமாக அலசித் துருவினேன்.

பொரும்பாலான பணியாளர்களைப் போலவே கீழ் மத்திய தரக் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பொறியாளர். மனைவியும் மற்றொரு நிறுவனத்தில் பணியாளர். ராகவனின் தகுதிச் சான்றிதழ்கள் சரி. அவனது பணித் திறன் சரி. அலுவலகப் பழக்கங்கள் சரி. எல்லாம் சரி; ஆனால், எங்கே தப்பு?
‘‘ேஹாப் ஐஆம் நாட் லேட்!’’ கதவை மெலிதாய்த் தட்டித் திறந்து உள்ளே வந்தாள் சுகந்தி.

‘‘வா! நீதான் ஒரு நல்ல தீர்ப்பு சொல்லணும்...’’
‘‘நீதிபதி பதவியெல்லாம் வேணாங்க. என்ன விஷயம்..?’’

‘‘சுகந்தி!’’ என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் கூறி முடித்தேன். ‘‘இது நம்ம அலுவலகத்துக்குள்ள நடந்த சம்பவமில்லை. ஆனா, நம்ம அலுவலர் ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயம். அதான்...’’பளிங்கு மேஜையில் ஓசையின்றி விரல்களைத் தட்டி முடித்த சுகந்தி, முன் முடியைத் தள்ளி விட்டபடி பேச ஆரம்பித்தாள்.

‘‘ராகவன், தான் செஞ்சது தப்புதான்னு ஃபீல் பண்றாருல்ல? அப்ப அதுக்குரிய தண்டனையை அவரு அனுபவிக்கட்டும். இது ஒரு தீர்வு. இன்னொண்ணு - புகார் கொடுத்திருக்கிற பையனை நாம போய்ப் பார்த்துப் பேசிட்டு வருவோம். விளக்கம் சொல்வோம். ராகவனை மன்னிப்பு கேட்கச் சொல்லுவோம். பாதிக்கப்பட்ட பையனே தன்னோட புகாரைத் திரும்ப வாங்கிக்கிட்டாருன்னா சரி; இல்லேன்னாலும் பரவால்லை. நம்ப ராகவன்தான் ஒத்துக்கறாருல்ல. மறைக்கலையே... ஆக, உப்பைத் தின்னவன் தண்ணியக் குடிக்கத்தானே வேணும்?’’

என் நோக்கிலேயே தீர்ப்பு வந்த மகிழ்ச்சியில் உற்சாகமானேன். ‘‘ராகவனால் பாதிக்கப்பட்ட அந்தப் பையனுக்குத் தகுதி இருந்தா நம்ப கம்பெனியிலேயே அவனுடைய படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏத்த வேலையக் கொடுப்போம். சரியா?’’
சுகந்தியிடமிருந்து உடனடியாய் எதிர்க் குரல். ‘‘லஞ்சமா?’’
‘‘ச்சே ச்சே... என்ன சுகந்தி இது?’’

‘‘டோன்ட் டேக் இட் இன் அதர்வே - டேக் இட் இன் லைட்டர் சென்ஸ் - ஒங்க மாமனார் எனக்கு உங்களைத் தேர்ந்தெடுத்த மாதிரி ஆயிடக் கூடாது பாருங்க... இந்த அப்பாயிண்ட்மெண்ட்!’’‘‘நீ சொல்றதைப் புரிஞ்சிகிட்டேன். இந்தப் பிரச்னைக்கு இது இப்போதைய தீர்வு. ஆனா, நம்ம ஸ்டாஃப்ஸ் எக்ஸிக்கூட்டிவ் இவங்களை எல்லாம் நாம மனுஷங்களாக ட்ரீட் பண்ணணும். நீ சொல்வியே - காஸ்ட்லி கொத்தடிமைன்னு - யந்திரமாகி - மிருகமாகிடாம - அப்படியில்லாம அவங்களைக் கொஞ்சம் இயல்புலகுக்கு - நடப்புலகுக்குக் கொண்டு வரணும்...’’

‘‘ஆமா. இங்க ஒரு நூலகம் தயார் பண்ணுங்க. மாசம் ரெண்டு ஃபேமிலி கெட்டுகெதர் வைக்கச்சொல்லுங்க. அதுல அவங்கவுங்க படிச்ச புத்தகத்த, பத்திரிகையைப் பத்தி, பாரத்த சினிமா, நாடகம் பத்தி, கேட்ட கச்சேரி பத்தி, ஏன் - டி.வி. நிகழ்ச்சி பத்தி எல்லாம் பேசி பகிர்ந்துக்கச் செய்யலாம். வழக்கமான ெமடிக்கல் கவுன்சிலிங், அவேர்னஸ் மீட்டிங், மோடிவேஷன் செமினார், இண்டோர் கேம்ஸ், ஜிம் எல்லாம் பத்தாது.

ஒங்க ஸ்டாஃப், ஆல் கேடர் பணியாளர்கள் எல்லாருக்கும் பிரிச்சு பிரிச்சு மீட்டிங் வையுங்க - அதுல நெஜமான பல துறை சாதனையாளர்களை கூட்டிகிட்டு வந்து பேச்சு - கலந்துரையாடல்னு வாழ்க்கை அனுபவங்களைப் பேசி மனதைப் பக்குவப்படுத்திக்கலாம்...’’
 
‘‘குட். வாழ்க்கைப் பாடத்தை கத்துக் கொடுத்திருக்க. வெறும் காசு பணம் மட்டும் முக்கியமில்லனு பணியாளர்களுக்கு உணர்த்தச் சொல்ற. ஒரு தெளிவு பொறந்துடுச்சு... இதுக்குத்தான் பாரதி சொன்ன மாதிரி ‘காரியம் யாவினும் கை கொடுக்க’ சுகந்தி வேணும்கிறது!’’
‘‘போதும் உங்க காரியப் புகழ்ச்சி. அது சரி, புகார் கொடுத்த பையன் பேரு தெரியுமா உங்களுக்கு?’’

‘‘ம்... இன்ஸ்பெக்டர் சொன்னார் - மனோகர். சுகந்தி, நாம ராகவனைக் கூட்டிக்கிட்டு இன்னும் அரை மணியில ஆஸ்பத்திரிக்குப் போய் அந்த மனோகரைப் பாத்துப் பேசிடுவோம். அப்புறம் காவல்துறை அதிகாரிகள் கிட்டவும் நானும் ராகவனும் பேசிடறோம்!’’
‘‘சரி!’’இனம் புரியாத மகிழ்ச்சி என்னுள் மலர்ந்தது.

பூனை கஃபே!

ஜப்பானின் ஓஹாகி டூ இல்கெனா வரையிலான ரயில் தடத்தில் திடீரென பூனை கஃபே உதயமானது! அதுவும் ஓடும் ரயிலில்! 30 பூனைகள் செய்த குறும்பில் பயணிகள் உற்சாகமாகி நெகிழ்ந்து போனார்கள். ஆதரவற்ற பூனைகளுக்கு ஆதரவு தரும் விதமாக ரயில் நிலையத்துடன் பூனைகள் காப்பகம் ஒன்று இணைந்து செய்த ஒருநாள் நிகழ்ச்சி இது.

போர்வெல் விளக்கு!

கர்நாடகாவின் விஜயபுரா நகரிலுள்ள போர்வெல் ஒன்றில் டார்ச் தவறி விழுந்துவிட்டது. அப்படியே விட முடியுமா? எடுக்க முயற்சித்தார் மிஸ் செய்த வாலிபர். அவரது நண்பர் குழு அதற்கு செய்த ஹெல்ப் ஆசம். அப்படியே நண்பரை தலைகீழாக கால்களைப் பிடித்து போர்வெல் குழியில் இறக்கி சகாயம் செய்த வீடியோ... இப்போது செம ஹிட்.

மெட்ரோவில் மங்கி!

குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நிறைய விஷயங்கள் தாறுமாறு தகராறாக இருந்தாலும் ட்ராவல் என்பது இருவருக்கும் பிடித்தமானதுதானே! டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஆசையாய் பாய்ந்து ஏறி பயணித்த வீடியோதான் இன்று செம ஹாட் வைரல்.

அகிலன் கண்ணன்