ஹீரோயின்ஸ் latest updates



நடிக்க வருவதற்கு முன் மாடலிங் துறையில் இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா. அப்போது இரவு நேரங்களில் மும்பை பீச்சில் ரிலாக்ஸாக அமர்வதும், அங்கே மெரைன் ட்ரைவ் பண்ணுவதும் அவரது ஹாபி. இந்த ஸ்வீட் மெமரீஸை கிளறும் வகையில் ப்ரியங்காவின் இந்த பிறந்தநாளை பீச்சில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது அவரது ஃபேமிலி.

கேரளாவில் அமலாபாலின் வீட்டில் அழகான ஆர்கானிக் தோட்டம் இருக்கிறது. கார்டனின் ஒரு பகுதியாக பேஷன்ஃபுரூட் பயிரிட்டிருக்கிறார்கள். அமலாபாலின் அம்மா கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் அந்த பழத் தோட்டத்தில் சுவையான பழங்கள் காய்த்துவிட, ‘‘nature in the home...’’ என ஆனந்தமாகி விட்டார் பால்... அமலாபால்!

‘கபாலி’ ஹீரோயின் ராதிகா ஆப்தேவின் ஃபேஸ்புக் பக்கம் மீண்டும் ஹேக் செய்யப்பட்டுவிட, ‘எஃப்.பி. மெசஞ்சரில் எனக்கு யாரும் மெசேஜ் அனுப்ப வேண்டாம்’ என ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆப்தே. அடி ஆத்தே!

இந்தியில் அறிமுகமாகும் ‘டாடி’ படத்தின் ரிலீஸுக்கு முன், சீரடி சாய்பாபாவின் கோயிலுக்கு சென்று வந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘டாடி’ வெற்றியை தொடர்ந்தே பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்கள் பண்ணுவாராம்.

மணிரத்னம் ஹீரோயின் அதிதி ராவ் ஹைதரிக்கு பழங்கால நகைகள் என்றால் ரொம்பவே இஷ்டம். தனது 12 வயதில் பாட்டி பரிசாகக் கொடுத்த நெக்லஸை இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறாராம். ‘‘முதன் முதலில் கிடைச்ச தங்கம்... ஸோ, இட்ஸ் அல்ட்ரா
ஸ்பெஷல்!’’ என்கிறார் அதிதி.

‘ஸ்பைடர்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக ரொமேனியா சென்று வந்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அங்கே இவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே டிராகுலா பிறந்த இடம் என நம்பப்படுகிற sibiu என்ற நகரத்தில் படப்பிப்பு நடக்க, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அப்புறம்..? டிராகுலா நகரத்தை திகிலுடனே ரவுண்ட் அடித்து திரும்பியிருக்கிறார்.

ப்ரணீதாவின் நாய் பாசத்திற்கு அளவே இல்லை! தனது செல்ல நாய் bluவின் பெயரில் இன்ஸ்டா அக்கவுன்ட் தொடங்கியிருக்கிறார்! ‘‘தன்னோட குழந்தை சிறந்த குழந்தைனு சொல்றது மாதிரிதான் ஒவ்வொரு dog ஓனருக்கும் தங்களோட நாய்தான் பெஸ்ட்னு சொல்லத் தோணும். என்னோட ப்ளூவை இனி நீங்களும் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணலாம்!’’ என கண்கள் சிமிட்டுகிறார் ப்ரணீதா.

இந்தியில் ராய் லட்சுமி படுகிளாமராக நடித்த ‘ஜூலி2’ டீஸரை, இரண்டே நாளில் 24 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர். அடுத்த மாதம் படம் ரிலீஸ் என்பதால், அதன் ப்ரொமோஷன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் ராய்.

Brandyனா கேத்தரின் தெரஸாவுக்கு ரொம்பவே இஷ்டம்! நோ... இது சரக்கு இல்ல. கேத்தரின் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டி!

‘குலேபகாவலி’யை எதிர்பார்த்து காத்திருக்கும் ஹன்சிகா, சமீபத்தில் பர்சனல் ட்ரிப்பாக ஐரோப்பாவின் Croatia சென்று வந்திருக்கிறார். அங்கே ஸ்பிளிட் கடற்கரையில் சொகுசு படகிலும் ஜாலி ரைடிலும் கலக்கியிருக்கிறார்.

‘துப்பறிவாளன்’ ஹீரோயின் கேரளா புட்டு அனு எமானுவேல், டோலிவுட்டில் பிஸி பொண்ணு. ‘‘நீங்க ஏன் மலையாளத்துலேயும், தமிழ்லேயும் படங்கள் அதிகம் பண்றதில்லை?’’ என அனுவிடம் கேட்டால், ‘‘ரெண்டு மொழிகள்லேயும் நிறைய படங்கள் பண்ண ஆசைதான். ஆனா, பெஸ்ட் ஆஃபர்ஸ் தெலுங்கிலதான் அதிகம் வருது!’’ என்கிறார் சீரியஸாக!

இப்போது ரூமியின் நூல்களை தொடர்ச்சியாக வாசிக்கிறார் காஜல் அகர்வால். அவரைக் கவர்ந்த ரூமியின் வரி இதுதான்: ‘I am not this hair, I am not this skin. I am the soul that lives within!’

முன்பெல்லாம் ஃபில்டர் காஃபியை விரும்பிக் குடித்து வந்த ஸ்ருதிஹாசன், இப்போது தன் ஃபிட்னஸ் டிரெயினரின் ஆலோசனைப்படி சோயா மில்க் அருந்துகிறார். ஆர்கானிக் க்ரீன் டீயும் ஸ்ருதியின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இருக்கிறது.

தமிழில் ‘2.0’ மட்டும் கைவசம் வைத்திருக்கும் எமி ஜாக்சன், இப்போது சாண்டல்வுட்டில் சிலுசிலுக்கிறார். கன்னடத்தில் கிச்சா சுதீப்புடன் நடித்து வரும் ‘த வில்லன்’ படப்பிடிப்புக்காக சிக்மகளூரில் இந்தப் புயல் மையம் கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர்களின் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நயன்தாரா, முழுக்கதையையும் கேட்பதுடன், உடனேயே, தான் நடிப்பது
குறித்தான ரிசல்ட்டையும் சொல்லி விடுகிறார்.

தமன்னாவின் ஃபேவரிட் சிட்டியில் நியூயார்க்கும் இடம்பெற்றுவிட்டது. சமீபத்தில் அங்கு சென்றவரை இந்திய விழா ஒன்றில் கவுரவித்திருக்கிறார்கள். அங்கே நடந்த அணிவகுப்பு பேரணியிலும் கலந்து கொண்டிருக்கிறார். அரசியல் என்ட்ரிக்கு இது அச்சாரமா?!

ஆஸ்திரேலியன் ரைட்டர் & புரொட்யூசர் Rhonda Byrne, த்ரிஷாவின் ரசிகை ஆகிவிட்டார் போல. தான் எழுதிய ‘How the secret changed my life’ புத்தகத்தை தனது ஆட்டோகிராஃபோடு த்ரிஷாவிற்கு அனுப்பியுள்ளார். ‘‘This is so so special’’ என சிலிர்க்கிறார் த்ரிஷா.

தொகுப்பு: மை.பாரதிராஜா