மெகா சீட்டிங் தேர்வு!



- ரோனி

பறக்கும்படை ஓவர்டைம் பார்த்தாலும் எக்ஸாமில் அக்கம் பக்கம் அரியர் தீர்க்கும் சிலர் ஆல் ஓவர் உலகிலும் உண்டுதான். அதற்காக கல்லூரியின் அத்தனை மாணவர்களும் அதேபோல இருந்தால் எப்படி? பீகாரின் அந்த கல்லூரி வராண்டாவில் அத்தனை மாணவர்களும் புக்கை புரட்டி ஐயம் தெளிந்து தேர்வு எழுதும் காட்சி சோஷியல் தளங்களில் ஷேர் ஆகி, மாநிலத்தின் மானமே கிழிந்துவிட்டது.

வீர்குன்வர்சிங் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அது என மிக லேட்டாக கண்டுபிடித்த மாநில அரசு, பிரஷர் கொடுக்க... தேர்வு செல்லாது என கூறப்பட்டுவிட்டது. ‘‘கேன்சலான பிஏ இரண்டாம்தாள் தேர்வுக்கு முன்னரும் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்கள் வந்தன. எனவே தேர்வை வேறு தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம்...’’ என பதிலளித்திருக்கிறார் பல்கலையின் துணைவேந்தர் சையது மும்தாஸுதின். கடந்த 2015ம் ஆண்டிலும் பீகாரில் இதுபோல காப்பி முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.