கல்விக் கடனில் ஆப்பிள் போன்!



- ரோனி

தென் ஆப்பிரிக்காவின் வால்டர் சிசுலு பல்கலையில் நடந்தது சிம்பிள் தவறுதான். விளைவு? அரசே தவிக்கும் அவலம். கடந்த ஜூனில் தனியார் நிறுவனம் ஒன்று அரசு கல்விக்கடனில் உணவுக்காகத் தரவேண்டிய தொகை 107 டாலர்களை மாணவி ஒருவருக்கு மாற்றும்போது திடீர் குளறுபடி செய்ய, தவறுதலாக ஒரு மில்லியன் டாலர்கள் மாணவியின் வங்கிக்கணக்கில் ஏறிவிட்டது.

எங்கே தப்பு என அரசு தவறை என்கொயரியில் கண்டுபிடித்து விட்டதுதான். ஆனால், என்ன புண்ணியம்? பார்ட்டி, ஆப்பிள் போன், டிசைனர் ட்ரெஸ் என 61 ஆயிரம் டாலர்களை காலி செய்துவிட்டார் அந்த மாணவி. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க தேசிய மாணவர் கல்விநிதி ஆணையம், குவியும் கல்விக்கடன் அப்ளிகேஷன்களால் தள்ளாடி வரும் நிலையில் இந்த விவகாரம்... அரசின் திறனுக்கு இது ஸ்வீட் சாம்பிள்.