பிள்ளையார் சுழி!பெப்ஸி / தயாரிப்பாளர் பிரச்னைக்கான பிள்ளையார் சுழியை கண்டுபிடித்த உம்மை எப்படி பாராட்டுவது?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கோரக்பூர் சம்பவம் இதயத்தை நொறுக்கிவிட்டது. குழந்தைகளைக் கொன்ற கோரக்பூர் அரசு மருத்துவமனை கட்டுரை பேரதிர்ச்சி.
- அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்; சத்தியநாராயணன், சென்னை; கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி; சுகந்தி நாராயண், வியாசர் நகர்.

தோத்தி சேலை பெண்களுக்கு கவுரவம் தந்தால் சரிதான். முழங்கால் மேலேறிய சேலையில் பளபளக்கும் சமந்தாவுக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க சார்.
- ஆர்.சண்முகராஜ், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; லட்சுமிநாராயணன், வடலூர்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.கலாப்ரியாவின் நேர்முகம் அவரது கவிதைகளைப்போலவே தனித்துவ அழகு.
- ஆர்.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சுகந்தி நாராயண், வியாசர்நகர்.

குப்பைமேட்டை குழந்தைகளுக்கான பூங்காவாக்கிய ராமதாஸின் பணி அற்புத மேஜிக்.
- வண்ணை கணேசன், சென்னை;

அர்ஷத் ஃபயாஸ், சென்னை; லட்சுமி நாராயணன், வடலூர்; பூதலிங்கம், நாகர்கோவில்; சண்முகராஜ், சென்னை; மனோகர், கோவை; தேவா, கதிர்வேடு; ஜானகி ரங்கநாதன், சென்னை; - த.சத்தியநாராயணன், சென்னை.

கவிதை வனத்தில் ரவிக்குமாரின் கவிதை நெகிழ்ச்சிக் கனல்.
- பிரீத்தி, செங்கல்பட்டு; சண்முகராஜ், சென்னை.

அப்பா, அம்மா, மகள் சிறுகதை அட்டகாசம்.
- பாலசுப்பிரமணியன், தேனி.

வேஷ்டி புடவை தலைப்பில் ஆவணி மாத கல்யாண ட்ரெண்டிங்கை தொடங்கிவைத்து ஜமாய்த்துவிட்டீர்கள்.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; மயிலை.கோபி, அசோக்நகர்.

ஊஞ்சல் தேநீரில் தன் அற்புத ஆளுமை மூலம் நம்மை அசத்திய கவிக்கோ புதுமை மனிதரேதான்.
- அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

வலியில்லாத வாழ்வை முதியவர்களுக்கு தரும் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் 7 டாக்டர்களும் மனிதர்களில் மாணிக்கங்கள்.
- பூதலிங்கம், நாகர்கோவில்; மனோகர், கோவை; லட்சுமி நாராயணன், வடலூர்; சத்தியநாராயணன், சென்னை.

உயர்சமயமாக உண்மையை ஏற்ற தியாசஃபிகல் சொசைட்டியைப் பற்றிய ‘அறிந்த இடம் அறியாத விஷயம்’ அற்புத அனுபவம்.
- மனோகர், கோவை; ராம.கண்ணன், திருநெல்வேலி; வண்ணை கணேசன், சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்; பாலசுப்பிரமணியன், தேனி; சுகந்தி நாராயண், வியாசர்நகர்.
 
காட்ஃபாதர் தொடர் ரோலர்கோஸ்டர் வேகம் என்றால், அரஸின் கிளாமர் ஓவியங்கள் அத்தனையும் அமர்க்கள கண்காட்சி.
- பூதலிங்கம், நாகர்கோவில்.

கா ஃபி டேபிளில் ஹானர் பேண்ட் 3 பற்றிய செய்தி அருமை. கேரட்டில் கிடைத்த மேரியின் நிச்சயதார்த்த மோதிரம் பற்றிய செய்தி அதிசயம். 
- சைமன்தேவா, விநாயகபுரம்; தேவா, கதிர்வேடு; கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி.