ஆபீஸில் தூங்கலாம்- ரோனி 

ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு என்னென்ன வசதிகளைச் செய்து தரும்? பஸ் வசதி, கேன்டீன் ஆகியவை... ஆனால், சீனாவில் ஆபீசிலேயே தூங்குவதற்கான மெத்தை வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். பெய்ஜிங்கில் சீப்ரேட்டில் கிராண்டான வசதிகளோடு சந்தைக்கு வந்துள்ளது தூங்குவதற்கான மெத்தை @ கேப்சூல். வீட்டில் கர்லான் பெட் இருக்கும்போது கேப்சூலுக்கு என்ன அவசியம்?

ஆபீசில் வரும் அசகாய தூக்கத்தை சமாளிக்கவே இந்த ஐடியா. ஷியாங்சூயி எனும் நிறுவனம் தயாரித்துள்ள கேப்சூலில் அரைமணி நேரம் குட்டித்தூக்கத்தை கெட்டியாக போட்டுவிட்டு எனர்ஜி ஊற்றெடுக்க வேலையைப் பார்க்கலாம் என்கிறார்கள் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தினர். அரைமணிநேர க்யூட் தூக்கத்திற்கு கட்டணம் ரூ.96.