அவமானத்தை வென்ற மாற்றுத்திறனாளி!



தொகுப்பு: ரோனி

மனிதவளம் கொட்டிக்கிடக்கும் இ்ந்தியாவில் எளிய மனிதர்களுக்கு மரியாதைக் கிடைப்பதே ‘சால’ கஷ்டம். இதில் பிறரின் உதவியாலேயே வாழும் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை என்னாகும்? பாரா அத்லெட் சுவர்ணா இதற்கு சாம்பிள். டெல்லியைச் சேர்ந்த சுவர்ணா, பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் உலகளவில் அறியப்பட்ட முகம். இரண்டு வயதில் போலியோ தாக்கியதால் கால்கள் முடங்கி விட, இன்றுவரை வீல்சேர் வாசம்.

அண்மையில் நாக்பூர் டூ நிஜாமுதீன் ரயிலில் பயணித்தார். உட்காரும் வசதியுடைய சீட்டை சுவர்ணாவுக்கு அதிகாரிகள் ஒதுக்கவில்லை. மேலே படுக்கும் வசதியுள்ள சீட்டை பயன்படுத்த அவரை வற்புறுத்தியுள்ளனர். மாற்றுத்திறனாளியான சுவர்ணா, தரையில் அமர்ந்து பயணிக்கும் அவலத்தை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவேயில்லை. இந்த மேட்டர் இந்தியா முழுவதும் பரவ, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு என்கொய்ரிக்கு உத்தரவிட்டு சைலண்டானார். NCPEDP என்ற மாற்றுத்திறனாளி அமைப்பின் உயரிய விருதை சுவர்ணாவுக்கு வழங்கப்போவது யார் தெரியுமா? அதே ரயில்வே அமைச்சர்தான்!