நியாயமா?



- ரீடர்ஸ் வாய்ஸ்

‘விஐபி’யின் முதல்பாக சுவாரசியத்தை மிஞ்சும் ட்ரீட் ‘விஐபி-2’ என்பதற்கு டைரக்டர் சௌந்தர்யாவின் பேட்டி கேரண்டி தந்தது. இப்படம் ஜெயித்தால் அஜீத்தை இயக்கும் சௌந்தர்யாவின் ஆசை நிறைவேறிவிடும்.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

எளிய மக்களுக்காக நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் வராக்கடனாக வாரிவிட்ட அத்தனை கோடி ரூபாயும் மக்களுடையதுதானே! மேலும் வரி என்பது நியாயமா?
- லட்சுமிபுத்திரன், விழுப்புரம்.

வடமாநிலத் தொழிலாளர்களின் வலிநிறைந்த வாழ்க்கையை எத்தனை வார்த்தைகளாலும் விளக்கமுடியாதுதான். இசையோடு தொடங்கி, இசையோடு முடித்த வடமாநிலத்தொழிலாளர் கட்டுரை கச்சிதம்.
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; பூதலிங்கம், நாகர்கோவில்; குமார், விழுப்புரம்; த.சத்தியநாராயணன், சென்னை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; மனோகர், கோவை.

மாற்றுத்திறனாளி என்றாலும் மாரத்தான் போட்டியில் சாதித்த ஷாலினி சரஸ்வதி அசகாய நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.
- எஸ்.ப்ரீத்தி, செங்கல்பட்டு; மயிலை கோபி, அசோக்நகர்; சண்முகராஜ், சென்னை.

கவிதை வனத்தில், ‘ஏன் வதைக்கவேண்டும்’, ‘அருளே திருவே’ என்ற இருகவிதைகளும் கலக்கல்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘இளைப்பது சுலபம்’ தொடரில் பா.ராகவனின் எழுத்து நகைச்சுவையோடு புல்லரிக்க வைக்கிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘தாதா 87’ படத்தில் சாருஹாசனின் யுனிக் கெட்டப், ஜனகராஜின் ரீஎன்ட்ரி என படம் பட்டையைக் கிளப்பும் என நம்புகிறேன்
- வண்ணை கணேசன், சென்னை.

யுவன் சந்திரசேகரின் பேட்டியில் திறமைசாலிகளை முன்னுதாரணமாகக் காட்டும் குணம்தான் அவரை எழுத்தாளர்களின் தனித்துவமாக காட்டுகிறது.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

லிஜோ ஜாய் போல பலரும் மேல்நிலைக்கல்வியை தொடமுடியாமல் போனதற்கு ரிசர்வேஷன்தான் காரணம். அதை ஒழித்து திறமைக்கு மரியாதை தர அரசு முன்வரவேண்டும்.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்.

பல்ஹர்ஷா சென்று திருச்சிக்கு திரும்பிய அருள்குமரனின் புறாவைப் பார்த்து எங்களுக்கும் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
- மயிலை கோபி, அசோக்நகர்; ராமகண்ணன், திருநெல்வேலி; பூதலிங்கம், நாகர்கோவில்.

நான் பணியாற்றிய ‘ஐசிஎஃப்’பில் எனக்கே தெரியாத பல விஷயங்களைக் கூறிய ‘அறிந்த இடம் அறியாத விஷயம்’ அட்டகாச டாகுமெண்ட்ரி. தமிழ்ப் பத்திரிகைகளிலேயே ஐசிஎஃப்பை பிரமாண்டப் பதிவாக்கியது ‘குங்குமம்’தான்.
- சத்தியநாராயணன், சென்னை;

வளையாபதி, தோட்டக்குறிச்சி; வண்ணை கணேசன், சென்னை; சண்முகராஜ், சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்; மனோகர், கோவை; சிவமைந்தன், சென்னை. பிக்டேட்டா பற்றிய காம்கேர் புவனேஸ்வரியின் தொடரை வரிக்குவரி ரசிக்கலாம்.
- சிதம்பரகுமாரசாமி, அசோக்நகர்.