கவிதை வனம்சந்தேகம்

ஆடி கடைவெள்ளிக்கு
கிடா வெட்டி படையலுக்குக்
காத்திருக்கும்
அய்யனாருக்கு
வறண்ட நிலங்களை
கண்டு சுருண்டு
விழுந்து இறந்த
விவசாயிகளின் விபரம்
தெரியாமல் போனது எப்படி?

  - சங்கீத சரவணன்அதிசயம்


ராமனும்
பெரியாரும்
ஒரே மேடையில்
தோன்றும்
அதிசயத்தை
குழந்தைகளே
நிகழ்த்துகிறார்கள்
மாறுவேடப்போட்டிகளில்
- கு.வைரசந்திரன்