ஆசிட் பாட்டிலோடு ரக்‌ஷாபந்தன்!டெல்லியின் வணிகப்பகுதியான கன்னாட் பிளேஸ். குண்டூசி டூ ஃபிட்ஜெட் ரன்னர் வரை கிடைக்கும் அக்கட்டிடத்தின் பி பிளாக்கில் முகத்தை மறைத்து கூனிக்குறுகி ரிதுராய் அமர்ந்திருக்கிறார். தன் சகோதரியின் பிரேஸ்லெட் கடையை அவரின் பிள்ளைகளோடு சேர்ந்து கவனித்துக்கொள்ளும் ரிதுராய், கடைக்கு வருபவர்கள், தனக்கு உதவியவர்களின் கைபிடித்து மலர்ச்சியோடு ரக்‌ஷாபந்தன் கயிறு கட்டியபடி இருக்கிறார். 

இன்று ஆதரவற்று அமர்ந்திருக்கும் ரிதுராய்க்கும் முன்பு கணவன், இரு பிள்ளைகள் என குடும்பம் இருந்தது. 19 வயதில் பாலுறவுக்கு மறுத்ததால் கோபத்தில் ஒருவன் வீசிய ஆசிட்டால், உருகியது முகம் மட்டுமல்ல... அவரது வாழ்வும்தான். முதலில் குடும்பம் கைவிட்டது. அலங்கோல முகத்தால் எங்கு வேலை கிடைக்கும்?

தன் சகோதரியின் கருணையால் கிடைத்ததுதான் கன்னாட் பிளேசின் பிரேஸ்லெட் வியாபாரம். 2004ல் 27 ஆக இருந்த எண்ணிக்கை 2014ல் 309 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஆசிட் தாக்குதல்களில் (185) முதலிடம் வகிக்கிறது என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆணையம்.