காசு வேண்டாம் காதல் போதும்!- ரோனி

‘என் மகள் இப்படிச் செய்து விட்டாளே...’ என மனம் குமைந்து கிடக்கிறார் மலேசிய பணக்காரரான கே பெங். மூன்று கண்டங்களில் வீடு, பிரைவேட் ஜெட் அத்தனையும் விட்டுவிட்டு அவரது ஆசை மகளான ஏஞ்சலினா ஃப்ரான்சிஸ், பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாத காதலனை மணந்து கொண்டதுதான் அப்பாவின் வருத்தத்துக்கு காரணம்.

300 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரியான பெங்கின் மகள் ஏஞ்சலினா, 2008ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் படிக்கும்போது ஜெடிடியா ஃப்ரான்சிஸ் என்ற கரீபிய கட்டழகன் மீது மையலாகி விட்டார். அப்பா பெங், கண் சிவந்து நம்பியாராகி கையைப் பிசைய, எம்ஜிஆராக ஜெடிடியா மாற... இருவரும் கமுக்கமாக 30பேர் முன்னிலையில் கெட்டிமேளம் கொட்டி 1500 டாலர்களில் மேரேஜை முடித்து ஃபிரான்சிஸின் அறையில் குடித்தனமே செய்யத் தொடங்கிவிட்டனர். காதலே ஜெயம்!