ஜீனியஸ் சுட்டி!-ரோனி

கறை நல்லது என சாக்லெட்டை உடையாய் அணிவது, இரவெல்லாம் பாடி பெற்றோர்களை டார்ச்சர் செய்வது, ஒவ்வொரு பொருளையும் உடையுமா என ரிசர்ச் செய்வது என ஒவ்வொரு வீட்டிலும் வாண்டுகளின் வம்புகள் வேறுபட்டாலும், அவர்கள் எதிர்கால ஜீனியஸ்களாக குறும்புகளும் தேவைதான்.

லீகோ போட்டியில் ரைலி என்ற சிறுவன் செய்த டிசைன் அப்படி. லீகோ நிறுவனம் அண்மையில் சிறுவர்களுக்கு நடத்திய போட்டியில்தான் புதிய ஜீனியஸ் ரைலி உதயமானார். பல சிறுவர்கள் டாங்கி, கட்டிடம், கம்ப்யூட்டர் என லீகோ மூலம் உருவாக்கியபோது, ரைலி, சிம்பிளாக ஒரு மஞ்சள் நிற லீகோ பிரிக்கை எடுத்து வைத்து புழு என பெயரிட்டிருந்தான். ‘பையனுக்குள்ள இப்படியொரு மினிமலிச ஐடியாவா!’ என ஆச்சர்யத்தை பொங்க வைத்துவிட, ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்த 12 வயது சுட்டிதான் ஹாட்.