சீனா திருட்டு!



-ரோனி

இந்தியா என்றாலே சீனாவுக்கு இளப்பம்தான். இன்ச் பை இன்ச்சாக இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கிறது என்றால், மும்பைக்கு வந்த சீன மனிதர்கள் கூட அப்படியே தம் தேசத்தை ஃபாலோ செய்திருக்கிறார்கள்! அண்மையில் கோரேகானில் நடந்த உலகளாவிய நகைகள் கண்காட்சியில் திடீரென ஒரு கடையில் பரபரப்பு. சில வைரங்களை காணோம் என ஸ்டால் ஓனர்கள், போலீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க, டீசலுக்கு காசு வாங்கிக்கொண்டு திருடர்களை துரத்தியது காவல்துறை.

ஏர்போர்ட்டில் ஹாங்காங்குக்கு தப்பி ஓட டிக்கெட் வாங்கி சாதுவாக உட்கார்ந்திருந்த சீனாக்காரர்களை வலைவீசிப் பிடித்தவர்கள், மாண்டரின் மொழியில் சம்சாரித்து அவர்களின் பையில் இருந்த ஷாம்பூ பாட்டிலுக்குள் பதுக்கப்பட்டிருந்த வைரங்களை கைப்பற்றியிருக்கிறார்கள். ரூ.9 ஆயிரம் கட்டி ரெஜிஸ்டர் செய்து கண்காட்சிக்குச் சென்று கைவரிசை காட்டிய இந்த நூதன சீனர்கள் திருடிய வைரங்களின் மதிப்பு ஜஸ்ட் ரூ.34 லட்சம்தான்.