மேஜிக் ஃபிரிட்ஜ்-ரோனி

இன்றும் இந்தியாவில் உணவை முறையாக பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ் வசதியில்லாத வீடுகள் ஏராளம். அதேசமயம் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தவிக்கும் மக்களும் இங்குதான் அதிகம். ஓராண்டுக்கு இந்தியாவில் வீணாகும் உணவின் அளவு 67 மில்லியன் டன் களாகும். இதை தீர்க்கத்தான் டெல்லியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வழிகாட்டியுள்ளார். வசந்த்கன்ஞ் பகுதியைச் சேர்ந்த தீக்க்ஷிதா குல்லர்தான் மேஜிக் ஃபிரிட்ஜின் பிரம்மா. இதில் காய்கறிகளை, பழங்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியுமாம்.

செங்கற்கள், மணல், சணல்பைகள், மூங்கில்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த ஃபிரிட்ஜை உருவாக்கியுள்ளார் தீக்‌ஷிதா. செவ்வக அமைப்பின் உள்ளே மற்றொரு செவ்வக வடிவில் கற்களை அமைத்து, இரண்டுக்கும் இடையில் மணல் நிரப்பி, மூங்கில்களை அடுக்கி ரெடியான மேஜிக் ஃபிரிட்ஜ் அசத்தல். 120 கிலோ காய்கறிகளை 7 நாட்களுக்கு கெடாமல் சேஃப் செய்யலாமாம். முக்கியமான விஷயம், இதற்கு மின்சாரம் தேவையில்லை!