காதல் விண்ணப்பம்!
ரோனி
அமெரிக்காவைச் சேர்ந்த காதலர் தன் நெஞ்சில் பொங்கிய காதலை எந்த சிச்சுவேஷனில் சொன்னார் தெரியுமா? ஓக்லஹாமாவைச் சேர்ந்த பிராண்டன் தாம்சன், தன் பெண் தோழியான லியாண்ட்ரியா கீத்திடம், தன் மனதைத் திறந்து காட்ட நினைத்தபோதுதான் விதி சதி செய்தது. யெஸ், தன் பிறந்த நாளான ஜூலை 4 அன்று லவ்வைச் சொல்லி அவரை காந்தமாய் இழுத்து தன் மடியில் போட்டு கொஞ்ச நினைத்தார் பிராண்டன்.
ஆனால், அன்றுதான் பிராண்டனின் மீது பதிவான ஐந்து எஃப்ஐஆர் குற்றச்சாட்டுகளுக்காக அவரை மாமியார் வீட்டுக்கு கூட்டிப் போக போலீசார் வந்தனர். அவர்களிடம் ‘ஐ யம் சஃபரிங் ஃப்ரம் லவ்!’ என பர்மிஷன் கேட்டு, கிடைத்த 5 நிமிஷ கேப்பில் காதலை தோழியிடம் ப்ரபோஸ் சொல்லித்தான் மூச்சு விட்டிருக்கிறார் பிராண்டன். வாட் எ லவ் ஸ்டோரி!
|