ட்ராஃபிக் கால் கிடைத்த கார்!



ரோனி

நம் ஊரில் அம்பாசிடரை திருடினாலே கூட்டிக்கழித்துப் பார்த்து அரைமணி நேரத்தில் ஆசாமியைப் பிடித்துவிடுவார்கள். நூறு மீட்டருக்கு, 1 லிட்டர் பெட்ரோல் குடிக்கும் பிஎம்டபிள்யூவையே ஆட்டையைப் போட்டால் சும்மா விடுவார்களா? டெல்லியின் கன்டோன்ட்மென்ட் ரோடில், மெஸ்ஸில் நிறுத்தியிருந்த பினாகபானி என்ற ஆர்மி ஆபீசரின் பிஎம்டபிள்யூவைத்தான் டீன் ஏஜ் திருடர் ஆட்டையைப் போட்டார்.



மிளகாய்ப் பொடியை ஆபீசரின் கண்ணில் பருப்பு சாம்பாருக்கு தேவையான அளவு தூவிய திருடர், அவர் எரிச்சலில் அலறிக் கதறியதைப் பொருட்படுத்தாமல் தள்ளிவிட்டு விட்டு காரை மின்னல் வேகத்தில் கைவசப்படுத்தினார். அங்கிருந்த காவலர்களுக்கு போக்குக்காட்டி டபாய்த்து சாலைக்கு வந்தவர், வேகமாகப் போய்விடலாம் என்றுதான் நினைத்தார். ஆனால், ட்ராஃபிக் ஜாமில் வண்டிகள் கடல் அலைபோல 2 கி.மீ. தூரத்திற்கு நிற்க, தவித்த திருடரை சிம்ப்ளி சூப்பராக காரின் கதவைத் திறந்து அமுக்கிவிட்டனர் போலீசார். பிளான் ஓகே, பிராக்டிக்கலில் ஊத்திக்கிச்சே!