பெண்கள் ரயில்வே!



அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்த கொச்சி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனை நினைத்து நாம் பெருமைப்பட நிறைய விஷயங்கள் உள்ளன. அதில் முதன்மையானது, இந்த ரயில்நிலையத்தில் டிக்கெட் போடுபவரிலிருந்து வண்டி ஓட்டுபவர் வரை 80% பேர் பெண்கள்தான் என்பது!

இங்கு எட்டுமணி நேர ஷிப்ட்டில் வேலை செய்யும் பெண்கள் அனைவருமே மலையாள சுந்தரிகள்தான். கொஞ்சிப் பேசுவதும் சேரநாட்டு மலையாளத்தில்தான். 39 டிரைவர்களில் 7 பேர் பெண்களே. மற்றுமொரு புதிய விஷயத்தையும் கேரள அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக துணிச்சலுடன் செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

அது என்ன தெரியுமா..? திருநங்கைகளை பல்வேறு புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்கள் கூட பணியமர்த்த தயங்கும் நிலையில் மெட்ரோ ரயிலில் அவர்களுக்கு பணிவாய்ப்பை அள்ளித் தந்துள்ளது கேரளா அரசு. ரயில்வே இயக்கத்தை பராமரிப்பதில் 23 பேர் உட்பட 60 திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது!