ரேடியோ செய்த உதவி!



மும்பையிலுள்ள தனியார் ரேடியோ நடத்திய போட்டியில் வென்ற சட்டக்கல்லூரி மாணவி நிகிதா சுக்லா, பரிசைப்பெற ரேடியோ ஆபீசில் ஆஜராகியிருந்தார். பரிசை வாங்கியவர் ஆர்ஜே சுசரிதாவை சந்திக்க விரும்ப, அவர் நிகிதாவுடன் பேசும்போதுதான் தெரிந்தது, பார்வையற்ற நிகிதாவை பெற்றோர் வீட்டை விட்டு துரத்திவிட்டனர் என்று. ஏன்? திருமண டார்ச்சர்தான் காரணம்.

உடனே, தன் நிகழ்ச்சியில் நிகிதா பற்றிப் பேசினார் சுசரிதா. ஏறத்தாழ தங்குமிடமின்றி நண்பர்களின் உதவியோடு ஒருவேளை மட்டும் சாப்பிட்டபடி படித்து வந்த நிகிதாவுக்கு, அட்ரஸ் ப்ரூப் கூட கேட்காத ரேடியோ நண்பர்களின் உதவிகள் குவியத் தொடங்கியது. இப்போது நிகிதாவுக்கு மூன்றாம் ஆண்டு படிப்பு, உணவு, ஹாஸ்டல் செலவுகளுக்கான பணமும் கிடைத்துவிட்டதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார் ரேடியோ ஜாக்கி சுசரிதா.