மாமியாருக்கு டாய்லெட் பரிசு!



உத்தரப்பிரதேசத்தின் சந்தனா, இன்று தன் ஊர் முழுக்க, ஏன் இந்தியாவின் பிரதமரே புகழும் தூய்மையின் தூதராக போற்றப்படுகிறார்.

காரணம்? சிம்பிளாக ஒரு டாய்லெட் கட்டினார். அதற்காகவா இத்தனை பாராட்டுகள்? நோ. அப்புறம்? அதுதான் மேட்டர்! உத்தரப்பிரதேசத்தின் அனந்தப்பூரிலுள்ள சந்தனாவுக்கு, தன் மாமியாருக்கென ஒரு ஸ்பெஷல் டாய்லெட் கட்டி பரிசளிக்க ஆசை. அரசு அலுவலகங்களில் மனுக்களோடு அலைந்து பார்த்தும் அமீபா அளவும் பிரயோஜனமில்லை.

பொறுத்துப் பார்த்தவர், தன்னுடைய 5 ஆடுகளை விற்று ஒருவழியாக டாய்லெட் கட்டத்தொடங்கினார். 102 வயதான தன் மாமியாருக்காக கட்டிய கழிவறையை கறாராக நிறைவு செய்தவரின் முயற்சிக்குத்தான் இன்று உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சரி, கழிவறையைக் கட்டிய சந்தனாவின் வயது எவ்வளவு தெரியுமா? 90!