டேக் டைவர்ஷன் பாட்டி!



இங்கிலாந்தைச் சேர்ந்த வலேரி ஜான்ஸனுக்கு தன் வாராந்திர செக்கப்புக்கு ஹாஸ்பிடல் போகவேண்டும். அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி வைத்திருந்த வோர்செஸ்டர் நகரிலுள்ள பீப்பிள்டன் ராயல் ஹாஸ்பிடல் அவரது  வீட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவுதான். ஆனால், சாலையில் காரில் போகும்போதுதான் வலேரிக்கு ஃபீல் ஆனது, கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று.

பின்னே, நூறு மீட்டருக்கு ஒரு டேக் டைவர்ஷன் போர்டு வைத்திருந்தால் எப்படி? விதிகளை ஃபாலோ செய்து அப்படியும் இப்படியும் வளைத்து ஓட்டிய வண்டி டீசல் இல்லாமல் டக்கென்று நின்றபோதுதான் வலேரி ஜான்ஸனுக்கு தெரிந்தது, இங்கிலாந்து நாட்டின் பார்டர் தாண்டி ஸ்காட்லாந்தின் லார்கால் நகருக்கே வந்துவிட்டோம் என்று.

10 நிமிட ட்ரைவிங்கில் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர் எட்டு மணிநேரம் பயணித்திருந்தார். வலேரிக்காகக் காத்திருந்து நொந்துபோன அவரது குடும்பம், பதறிப்போய் போலீசில் புகார் கொடுத்து, பார்டர் தாண்டிய பாட்டியை பத்திரமாக மீட்டுவிட்டார்கள்!