அபாய ரன்னிங்!



-ரோனி

சாதாரணமான மேட்டர்தான். போகவேண்டிய ஊருக்கு ராங் ரூட் பஸ்ஸில் ஏறிவிட்டு, கண்டக்டரிடம் அர்ச்சனை வாங்கியபடி இறங்குவது எல்லாம் நமக்கு பழகிப்போன ஒன்று. ஆனால், இதுவே ரயிலில் நடந்தால் எப்படி இருக்கும்? நூடுல்ஸ் தேசமான சீனாவில் ஜியாங்சூவிலுள்ள சாங்க்சூ பகுதி ரயிலில் நடந்ததும் அதே ராங் ரூட் காமெடிதான். ஆனால், இது கொஞ்சம் மாறியிருந்தால் ரூட் மாறியவருக்கே சீரியசாகியிருக்கும்.

தவறான ரயிலில் ஏறியவர் இறங்கிவிட்டார்தான். என்ன கொஞ்சம் டைமிங் மிஸ்ஸாக, ரயில் பரபரவென கிளம்பிவிட்டது. இறங்கியவரின் இடதுகை நடுவிரல் மட்டும் மூடிய கதவில் நன்றாக சிக்கிக் கொள்ள, ரயிலோடு சில நொடிகள் அலறியபடி ஓடினார். பின் சக பயணிகள் சத்தம்போட்டு பிளாட்பார்ம் முடிவதற்குள் ரயிலை நிறுத்தி, கைவிரலோடு பயணியின் உயிரையும் மீட்டிருக்கின்றனர். தெய்வமே தெய்வமே!