food secrets! ஹீரோயின்ஸ்-மை.பாரதிராஜா

* வெளிநாட்டு வகையான ferrari rocher சாக்லெட்ஸ், சீஸ் வகை உணவுகள் தவிர இத்தாலியன் ஃபுட்ஸும் ரெஜினாவுக்கு பிடித்தவை.

* படப்பிடிப்பில் வழங்கப்படும் உணவுகளை ருசி பார்ப்பது நயன்தாராவின் பண்புகளில் ஒன்று. ஹைதராபாத் பிரியாணி, சைனீஷ் ஃபுட்ஸ் நயனின் ஃபேவரிட்.

* ‘இன்பர்மேஷன் இஸ் வெல்த்’ என்பது எமி ஜாக்சனுக்கு ரொம்பவே பொருந்தும். எந்த நாட்டில் என்னென்ன உணவுகள் கிடைக்கும் என்பது அத்துப்படி. ஃபுருட் சாலட், கிரீன் டீ, ஃப்ரெஷ் ஜூஸ் காம்போதான் அவரது எளிய காலை உணவு.

* ஒரு கிளாஸ் பால், ஒரு கப் ஓட்ஸ் இருந்தால் போதும் ராதிகா ஆப்தேயின் அதிகாலை இனிக்கும். ‘I think my favourite food could be omelette... a bloody good one...’ என்று சமீபத்தில் ராதிகா ட்விட்டியதற்கும், நம்மூரில் முட்டை விலை எகிறியதற்கும் தொடர்பில்லை!

* பாலிவுட், ஹாலிவுட் என பறந்து கொண்டிருந்தாலும் தென்னிந்திய உணவுகள் என்றாலே மனதை மயக்கும் சிரிப்பை உதிர்ப்பார் தீபிகா படுகோனே. கடல் உணவுகளும் பிடித்தமானது.

* அக்கா ஸ்ருதியைப் போலவே இத்தாலியன் ஃபுட் பிரியை அக்‌ஷரா ஹாசன். அப்பா, அக்காவுடன் லண்டன் ரெஸ்டாரன்ட்டுகளில் தேடித்தேடி உண்பது அக்‌ஷராவின் சாய்ஸ்.

* பூர்ணாவுக்கு கிச்சனில் ஓரளவு ஆர்வம் உண்டு. மட்டன் பிரியாணி, ஃபிஷ் ஃப்ரை என்றால் ஒரு வெட்டு வெட்டிவிடுவார்.

* சமந்தாவுக்கு கிரில் சிக்கன் பிடிக்கும். சென்னை வந்தால் இட்லி, தோசை, பொங்கல், வடை அவரது ஃபேவரிட். ‘‘சென்னையில இருந்தால் என் டயட் கண்ட்ரோலை மறந்துடறேன்!’’ என செல்லமாக அலுத்துக் கொள்கிறார்.

* ‘‘ரொம்ப நல்லா சாப்பிடுவது, balance diet பின்பற்றுவது இரண்டுமே ஹெல்த்தி’’ என நம்பும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு குலோப்ஜாமூன், ஆலு பரோட்டா என்றால் ஆசை அதிகம். கேக், பிஸ்கட்ஸ், ஐஸ்க்ரீம் என ரகுலின் ஃபேவரிட் லிஸ்ட் கொஞ்சம் நீளம்!

* சாப்பாடு பற்றி கேட்டால் பெரிய லெக்சரே அடிப்பார் பிரியங்கா சோப்ரா. இந்தியன், இத்தாலியன் உணவுகள் அவரது ஃபேவரிட். ‘‘கொஞ்சமா ஜங்க் ஃபுட் சாப்பிடறதுல தப்பில்ல. பர்கர்ஸ், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் பெஸ்ட் காம்பினேஷன். ஐ ஆல்ஸோ என்ஜாய் சிக்கன், மட்டன் பிரியாணி. கொஞ்சம் சிம்பிளா சாப்பிடணும்னு தோணினா தயிர்சாதமும் ஃபிஷ் கறியும் போதும்!’’ என்கிறார் பிரியங்கா.

* ஸ்ட்ரிக்ட் டயட் பராமரித்து வரும் தமன்னாவிற்கு பர்கர் மேல் தீராத காதல். நம்மூருக்கு வந்தால் இட்லி - தோசை விரும்பி ஆர்டர் பண்ணுவார். மும்பை வீட்டில் இருந்தால் சிம்பிள் பிரேக்ஃபாஸ்ட். ரொட்டியும் சாஸும் இருந்தாலே ‘That’s what I call a perfect morning!’ என்பார் ஃப்ரெஷ் புன்னகையுடன்.

* உணவு விஷயத்தில் காஜல் ஒரு வீட்டுப்பறவை. பொண்ணுக்கு கொஞ்சம் சமைக்கவும் தெரியும். அம்மாவின் கைப்பக்குவத்தில் சமைத்த ரெஸிபிகள் சால இஷ்டம். மெனுவில் ரைஸ் அதிகம் சேர்க்க விரும்பாதவர். ஃப்ரெஷ் பழங்கள், சாலட்டுகள், க்ரீன் டீ ஃபேவரிட். ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருந்தால் கண்டிப்பாக மதிய லன்ச்சில் அந்த ஊர் பிரியாணிக்கு முதலிடம் உண்டு.

* அமலாபாலுக்கு sea - food, கேரள உணவுகள் என்றால் கொள்ளை பிரியம். இப்போது கைவசம் படங்கள் அதிகமிருப்பதால் டயட் - எக்ஸர்சைஸில் கவனம் செலுத்துவதால் அன்லிமிடட் மீல்ஸ் பக்கம் கவனம் செலுத்துவதில்லையாம்!

* ‘முகமூடி’ ஹீரோயின் பூஜா ஹெக்டே எப்போது சென்னை வந்தாலும் ‘சவுத் இந்தியன் தளி’ ஆர்டர் பண்ணுவது வழக்கம். ‘‘ட்ராவலிங்கின் போது உணவு ரொம்ப அவசியம். என்னோட ஒவ்வொரு ட்ரிப்பிலும் அமேஸிங் ஃபுட் மெமரீஸ் உண்டு. நியூயார்க் போனால் பெரிய சைஸ் பீட்சா ட்ரை பண்ணுவேன். வாஷிங்டன்ல முதல் தடவையா கொரியன் ஃபுட் சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம்!’’ என்கிறார் பூஜா.

* ராய் லட்சுமிக்கு பாரிஸ் நகரத்து உணவு வகைகள் ரொம்ப இஷ்டம். அடிக்கடி காஃபி அருந்துவதும் பிடித்தமானது. ஹைதராபாத் பிரியாணி என்றால் டயட்டையும் மறந்துவிடுவார்.

* ரோட்டோர கடைகளில் சாப்பிடுவது என்றால் டாப்ஸிக்கு அத்தனை இஷ்டம். ஸ்பைஸி ஃபுட் பிரியை. காரசாரமான வட இந்திய உணவை மீதம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார். சிக்கன் பிடிக்கும். கடல் உணவுகள் அறவே பிடிக்காது!

* மும்பையில் வசித்து வந்தாலும் லண்டனில் கிடைக்கும் உணவு வகைகளைத் தான் அதிகம் விரும்புகிறார் ஸ்ருதிஹாசன். அங்கே சென்றாலே ஸ்ருதி ஃபீல் ஹேப்பி. ‘‘Eat healthy, love food, lucky me’’ என அடிக்கடி சிலாகிக்கிறார் ஸ்ருதி.

* ‘இஞ்சி இடுப்பழகி’யில் அடிக்கடி நொறுக்கு ஸ்நாக்ஸ் சாப்பிடும் அனுஷ்காவிற்கு நேர் மாறானவர் ரியல் அனுஷ்கா. ஆயில் ஃபுட்ஸ், ஜங்க் ஃபுட்ஸ் அறவே தொடாதவர். தினமும் ஒரு மணிநேரமாவது யோகா, ஜிம் என கவனம் செலுத்தும் அனுஷ், சாப்பாடு விஷயத்தில் தோணுவதை ஒரு பிடி பிடித்துவிடுவார். ‘‘தினமும் தவறாமல் காலை உணவு எடுத்துக் கொள்வது சிறந்த பழக்கம்...’’ என்ற அட்வைஸையும் இவரிடம் எதிர்பார்க்கலாம்.

* ‘நல்லா சாப்பிடுங்க, சந்தோஷமா வாழுங்க...’ இதான் நிக்கி கல்ரானியின் பாலிஸி. Sea food டார்லிங். சமீபத்தில் சம்மர் ட்ரிப்பாக வெளிநாடு சென்றவர் அங்கிருந்த ரெஸ்டாரென்ட்டில் மிகப்பெரிய இறாலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

* கேக், சாக்லெட்ஸ் அதிகம் விரும்பும் ஹன்சிக்கு அம்மாவின் சமையல் அவ்வளவு பிடிக்கும். படப்பிடிப்பில் இருந்தால் இரவில் ரசம் சாதம் விரும்பிக் கேட்டு வாங்குவார்.